சன்ரைசஸ் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்ற கொல்கத்தா!
சன்ரைசஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022ன் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முக்கியமான இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. சன்ரைஸ் அணியில் நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பி இருந்தனர்.
மேலும் படிக்க | சென்னை அணியில் இருந்து தோனி வெளியேறினால்....பாக்.வீரரின் ஆருடம்
முதலில் பேட்டிங் இறங்கிய கொல்கத்தா அணிக்கு வெங்கடேச ஐயர் மற்றும் ரகானே ஓபனிங் வீரர்களாக களமிறங்கினர். வெங்கடேச ஐயர் 7 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார். சிறிதுநேரம் ஜோடி சேர்ந்த ராணா மற்றும் ரஹானே அணிக்கு ரன்களை குவித்தனர். உம்ரான் மாலிகின் வேகத்தில் ரகானே, ராணா மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆகி வெளியேறினார். பின்பு களமிறங்கிய பில்லிங்ஸ் மற்றும் ரசல் பேட்டிங்கில் அதிரடி காட்டினார். இதனால் கேகேஆர் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. ரசலின் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது.
சிறிது கடினமான இலக்கை எதிர்த்து கிளம்புறீங்க சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராகுல் திருப்பாதி சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். பின்பு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் மார்க்ரம் சிறிது அணிக்கு ரன்கள் சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நிலைக்காததால் சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 123 ரன்கள் மட்டுமே அடித்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரசல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மேலும் படிக்க | ராயுடு ஓய்வா... என்ன சொல்கிறது சென்னை அணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR