Video: குல்தீப் யாதவின் அதிசய பந்து... வாயை பிளந்த இங்கிலாந்து - என்ன ஆச்சு பாருங்க!
Kuldeep Yadav Miracle Delivery: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது போட்டியில் (IND vs ENG 5th Test) குல்தீப் யாதவ், ஜாக் கிராலிக்கு வீசிய அந்த அற்புதமான பந்து கிரிக்கெட் உலகில் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
Kuldeep Yadav Miracle Delivery To Zak Crawley: இந்தியா - இங்கிலாந்து (IND vs ENG Test Series) அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. கடைசி ஐந்தாவது டெஸ்ட் போட்டி (IND vs ENG 5th Test) ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தின் தரம்சாலா நகரில் இன்று தொடங்கியது. குறிப்பாக, இந்திய அணியில் ரவிசந்திரன் அஸ்வினுக்கும், இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ்வுக்கும் இது 100ஆவது டெஸ்ட் போட்டியாகும்.
தேவ்தத் படிக்கல் அறிமுகம்
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி (Team England) பேட்டிங்கை தேர்வு செய்தது. பிளேயிங் லெவனை பொறுத்தவரை இந்திய அணியில் (Team India) ரஜத் பட்டிதார், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதில் தேவ்தத் படிக்கல், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். குறிப்பாக, தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இந்த போட்டியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சனுக்கு பதில் மார்க் வுட் சேர்க்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க | Dinesh Karthik: கிரிக்கெட்டில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு - அறிவிப்பு விரைவில்
குல்தீப் அசத்தல்
முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடினர். ஜாக் கிராலி - பென் டக்கெட் ஓப்பனிங்கில் இறங்கி வழக்கத்தை விட பொறுமையாக விளையாடினர். இந்த 18 ஓவர்கள் நீடித்தது. குல்தீப் யாதவ் பென் டக்கெட் 27 ரன்களில் விக்கெட் எடுத்து வெளியேற்றினார். ஒல்லி போப் 11 ரன்களில் குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) விக்கெட் எடுத்தார். மறுமுனையில் ஜாக் கிராலி அரைசதம் அடித்து மிரட்டினார். தொடர்ந்து, குல்தீப் யாதவ் அட்டாக் செய்து வந்த நிலையில் ஒரு அற்புதமான பந்தில் கிராலி குல்தீப்பிடம் காலியானார்.
குல்தீப் யாதவின் அதிசய பந்து...
ஓவர் தி ஸ்டம்பில் இருந்து வீசி, அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் செய்து, வலது கை பேட்டரான ஜாக் கிராலியின் லெக் ஸ்டம்பை தகர்த்தார் குல்தீப் யாதவ். இந்த பந்து சுமார் 10.9 டிகிரி அளவில் ஸ்பின் ஆனதாக கூறப்படுகிறது. அந்த டெலிவரியை வீடியோவில் பார்க்கவே மிக அற்புதமாக இருந்தது. ஷேன் வாட்சனின் பந்துவீச்சையே மிஞ்சிவிட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குல்தீப் யாதவ் அடுத்தும் இரண்டு விக்கெட்டுகளை தூக்கி, மொத்தம் 5 விக்கெட்டுகளை பதிவு செய்தார். அஸ்வினும் குல்தீப்பிற்கு உதவ இங்கிலாந்தின் கடைசி கட்ட பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அஸ்வின் தனது 100ஆவது போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜாவும் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
ரோஹித் - ஜெய்ஸ்வால் அதிரடி
இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக கிராலி 79 ரன்களை எடுத்திருந்தார். தற்போது இந்திய அணியின் ஓப்பனிங் ஜோடி ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ரன்களை குவித்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ