டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 10,000 ரன்களை கடந்த வீரர்கள்!
10,000 டெஸ்ட் ரன்களை எட்டிய 14வது வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.
ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க டெஸ்டின் 4வது நாளில் அடித்து அரிய சாதனையை பெற்றார். அலாஸ்டர் குக்கிற்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் மற்றும் 14வது இன்டர்நேஷனல் வீரரானார். அவர் தனது 218வது இன்னிங்ஸில் 10,000 ரன்களை எட்டினார், மேலும் இந்த ரன்களை வேகமாக அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார். குக் தனது 229வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டினார். இருவரும் 31 வயதில் வயதில் இந்த மைல்கல்லை எட்டினர்.
மேலும் படிக்க | அடுத்த சீசனில் இந்த 3 வீரர்களை கழட்டிவிடும் SRH அணி!
லார்ட்ஸ் டெஸ்டில் ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்ததன் மூலம் இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இங்கிலாந்தின் டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸின் முதல் போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது. லார்ட்ஸில் 69/4 என்ற ஸ்கோரில் இருந்து 277 ரன்களைத் அடித்து வெற்றி பெற்றுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 15,921
2. ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378
3. ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) - 13,289
4. ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288
5. அலஸ்டர் குக் (இங்கிலாந்து) - 12,472
6. குமார் சங்கக்கார (இலங்கை) - 12,400
7. பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) - 11,953
8. ஷிவ்நரைன் சந்தர்பால் (வெஸ்ட் இண்டீஸ்) - 11,867
9. மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 11,814
10. ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 11,174
11. ஸ்டீவ் வா (ஆஸ்திரேலியா) - 10,927
12. சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 10,122
13. யூனிஸ் கான் (பாகிஸ்தான்) - 10,099
14. ஜோ ரூட் (இங்கிலாந்து) - 10,015*
மேலும் படிக்க | என்னுடைய இந்த நிலைக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - இந்திய வீரர் கருத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR