17:34 27-10-2018
50 ஓவரில் முடிவில் மேற்கிந்திய அணி ஒன்பது விக்கெட் இழபுக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 95 ரன்கள் எடுத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணி சார்பாக ஜாஸ்ரிட் பும்ரா நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டும், யூசுவெந்திர சஹால், புவனேஷ்வர் குமார் மற்றும் காலேல் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.


 




17:00 27-10-2018
43.5 ஓவரில் ஜாஸ்ரிட் பும்ரா வீசிய பந்தில் நன்றாக விளையாடி வந்த மேற்கிந்திய வீரர் ஷாய் ஹோப் அவுட் 95 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


 




16:46 27-10-2018
41.3  ஓவரில் யூசுவெந்திர சஹால் வீசிய பந்தில் மேற்கிந்திய வீரர் ஃபாபியன் ஆலன் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


 




தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய அணி 39 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப்* 82(96) ரன்களும், ஃபாபியன் ஆலன்* 0(0) ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.



16:36 27-10-2018
38.3 ஓவரில் புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் மேற்கிந்திய வீரர் ஜேசன் ஹோல்டர் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 


 




15:59 27-10-2018


மேற்கிந்திய அணி 30 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப்* 46(64) மற்றும் ஜேசன் ஹோல்டர்* 7(17)எடுத்து ஆடி வருகின்றனர்.



15:26 27-10-2018


23.4 ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் மேற்கிந்திய வீரர் ரோவன் பவல் 4 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி மேற்கிந்திய அணி 24 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.


ஷாய் ஹோப்* 33(43)
ஜேசன் ஹோல்டர்* 0(2)


 




15:13 27-10-2018
19.4 ஓவரில் குல்தீப் வீசிய பந்தில் மேற்கிந்திய வீரர் சிம்ரான் ஹெட்மியரை (ரன்கள் 37) அருமையாக ஸ்டெம்பிங் செய்த எம்.எஸ்.தோனி


 




14:33 27-10-2018


13.1: WICKET! சாமுயூல்ஸ் 9(17) ரன்களில் வெளியேறினார்!



தற்போதைய நிலைவரப்படி... மேற்கிந்தியா 13.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 9(17)) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



14:14 27-10-2018


8.1: WICKET! கிரண்பவுள் 21(25) ரன்களுக்கு வெளியேறினார். 



தற்போதைய நிலைவரப்படி... மேற்கிந்தியா 9 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 2(7)) மற்றும் மெர்லான் சாமுயூல்ஸ் 1(2) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



13:57 27-10-2018


5.5: Wicket! பூம்ரா வீசிய பந்தில் வெளியேறினார் ஹெம்ராஜ் 15(20).



தற்போதைய நிலைவரப்படி... மேற்கிந்தியா 6 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. ஷாய் ஹோப் 0(0) மற்றும் கிரண் பவுள் 9(16) ரன்களுடன் களத்தில் உள்ளனர்!



இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி இன்று புனே மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகள் 1.30 மணியளவில் துவங்குகிறது.


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.


இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது எனினும் இரண்டாவது ஒருநாள் போட்டி முடிவு இன்றி ட்ராவில் முடிவடைந்தது. 


இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டி இன்று நடைப்பெறுகின்றது. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி பந்து வீச்சில் மிகவும் பலவீனமாக காணப்பட்டது. இதனால் அடுத்த நடக்கவிருக்கு மூன்று போட்டிகளில் புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா சேர்க்கப்பட்டு உள்ளனர். இப்போட்டில் சாதனை நாயகன் விராட் கோலி மேலும் ஒரு சாதனையினை படைக்க வாய்புள்ளது...


இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால்,.. தொடர்சியாக நான்கு ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்தவர் என்னும் AB de வில்லியர்ஸ் சாதனையினை சமன் செய்வார்.


இன்றைய போட்டியில் புவனேஷ்வர்குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் 100 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றிய 12-வது இந்திய வீரர் என்னும் பெருமையினை பெறுவார்.


நடந்து முடிந்த போட்டிகளின் அடிப்படையில் இந்த ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது, எனினும் இன்று நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் அந்தர கயிற்றின் மீது நடப்பது போல் இருமுனை முடிவை நோக்கி தான் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.