IPL Auction 2023 Live: ஐ.பி.எல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட சாம் கர்ரான்

Fri, 23 Dec 2022-6:47 pm,

Highest Paid IPL Players 2023 Auction: இந்தியன் பிரீமியர் லீக் சீசன் 16க்கான ஏலம் நடந்து வருகிறது. அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஐபிஎல் வீரர்கள் பட்டியல் பற்றி இங்கு பார்ப்போம்.

IPL Auction 2023 in Kochi: 16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான IPL 2023 மினி ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொச்சியில் மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய ஏலப் போட்டியில் மொத்தம் 87 வீரர்களுக்கான ஏலம் நடக்கிறது. இதில் 405 வீரர்கள் பங்கேற்று உள்ளார்கள். ஐபிஎல் மினி ஏலத்திற்கு முன்பே சென்னை, மும்பை அணிகள் தங்களது அணியை தயார் செய்துவிட்டன. எனினும் தற்போது கூடுதல் வீரர்களை தேர்வு செய்து அணியை பலப்படுத்தும் நோக்கில் சிஎஸ்கே உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சாம் கரண் போனால் என்ன பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கிய சிஎஸ்கே! தோனியின் மாஸ்டர் பிளான்


ALSO READ | 'வேலை முடிந்தால் கைக்கழுவி விடுவார்கள்' தனது முன்னாள் ஐபிஎல் அணியை சாடிய கிறிஸ் கெயில்


ALSO READ | IPL Mini Auction 2023: சாம்கரண் காட்டில் பண மழை! ஐபில் வரலாற்றில் புது உச்சம்

Latest Updates

  • கைல் ஜேமிசன்: 
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த கைல் ஜேமிசன். 1 கோடிக்கு ஏலம்.

  • டேனியல் சாம்ஸ்
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டேனியல் சாம்ஸ்-ஐ ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியது.

  • ரோமரியோ ஷெப்பர்ட்: 
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரூ. 50 லட்சத்துக்கு வாங்கியது. 

  • வில் ஜாக்ஸ்:
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ. 3.2 கோடிக்கு ஏலம் எடுத்தது.

  • மணீஷ் பாண்டே:
    மணீஷ் பாண்டேவை 2.4 கோடிக்கு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. 

  • பத்தாவது சுற்றில் விலை போகாத வீரர்கள்:
    எஸ். மிதுன், ஷ்ரேயான்ஸ் கோபால், முருகன் அஷ்வின், இஜாருல் ஹக் நவீத், சிந்தல் காந்தி ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை.

  • ஹிமான்ஷு சர்மா:
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஹிமான்ஷு சர்மாவை ரூ. 20 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

  • ஒன்பதாவது சுற்றில் விலை போகாத வீரர்கள்:
    லான்ஸ் மோரிஸ், முஜ்தபா யூசுப், கேஎம் ஆசிப் ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை.

  • முகேஷ் குமார்:
    பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஏலப்போட்டியில் டெல்லி முன்னிலை பெற்று ரூ.5.5 கோடிக்கு வாங்கியது.

  • சிவம் மாவி:
    கொல்கத்தா மற்றும் சென்னை வாங்க நினைத்த வீரரை குஜராத் டைட்டன்ஸ் அணி  6 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

  • யாஷ் தாக்கூர்: 
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 45 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

  • வைபவ் அரோரா: 
    கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில், இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 60 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

  • எட்டாவது சுற்றில் விலை போகாத வீரர்கள்:
    முகமது அசாருதீன், தினேஷ் பானா, சுமித் குமார் ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை.

  • என் ஜெகதீசன்
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என் ஜெகதீசனை ரூ. 90 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

  • கேஎஸ் பாரத்:
    குஜராத் டைட்டன்ஸ் அணி கேஎஸ் பாரத்தை 1.2 கோடிக்கு ஏலம் எடுத்தது. 

  • உபேந்திர யாதவ்:
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உபேந்திர யாதவை 25 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 

  • ஏழாவது சுற்றில் விலை போகாத வீரர்கள்:
    ஷஷாங்க் சிங், அபிமன்யு ஈஸ்வரன். கார்பின் போஷ், சௌரப் குமார், பிரியம் கார்க் ஆகிய வீரர்கள் ஏலம் போகவில்லை

  • நிஷாந்த் சிந்து:
    ஏழாவது சுற்றில் நிஷாந்த் சிந்தை சுமார் 60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

  • சன்விர் சிங்: 
    20 லட்ச ரூபாய்க்கு சன்விர் சிங்கை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • சமர்த் வியாஸ்: 
    20 லட்ச ரூபாய்க்கு சமர்த் வியாஸ்-ஐ ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

  • விவ்ராந்த் சர்மா:
    ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவ்ராந்த் சர்மாவை இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2.6 கோடிக்கு ஏலம் எடுத்தது.

  • ஆறாவது சுற்றில் விலை போகாத வீரர்கள்:
    ஹிம்மத் சிங், ரோஹன் குன்னும்மாள்,  சுபம் கஜூரியா, சேத்தன் எல்.ஆர்.  மற்றும் அன்மோல்ப்ரீத் சிங் என யாரும் ஏலம் எடுக்கப்படவில்லை.

  • ஷேக் ரஷீத்:
    ஆறாவது சுற்றில் ஷேக் ரஷீத்தை ரூ. 20 லட்சத்திற்கு வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ்

  • ஐந்தாவது ரவுண்ட் முடிவுற்ற நிலையில் அணியில் உள்ள வீரர்களின் விவரம்:

  • விற்கப்படாத வீரர்கள்:
    முஜீப் ரஹ்மான், தப்ரைஸ் ஷம்சி, ஆடம் ஜாம்பா மற்றும் அகேல் ஹொசின் ஆகிய வீரர்கள் ஐந்தாவது ரவுண்ட்டில் ஏலம் போகவில்லை

  • அதில் ரஷித்:
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதில் ரஷித்தை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

  • மயங்க் மார்கண்டே:
    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மயங்க் மார்கண்டேவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

  • ஆடம் மில்னே: 
    இன்றைய ஐபிஎல் ஏலத்தில் ஆடம் மில்னே-வின் பெயர் இடம் பெற்றது. ஆனால் எந்த அணியும் அவரை வாங்கவில்லை

  • இஷாந்த் சர்மா: 
    இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை டெல்லி கேபிடல்ஸ் அணி ரூ. 50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.

  • ஜே ரிச்சர்ட்சன்:
    மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 1.5 கோடிக்கு ஜே ரிச்சர்ட்சனை ஏலத்தில் எடுத்தது.

  • ஜெய்தேவ் உனத்கட்: 
    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஜெய்தேவ் உனத்கட்-ஐ  50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. 

  • ரீஸ் டாப்லி: 
    ரூ. 75 லட்சம் அடிப்படை விலையில் இருந்த ரீஸ் டாப்லியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

  • பில் சால்ட்:
    அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு பில் சால்ட்டை டெல்லி கேபிடல்ஸ் ஏலத்தில் எடுத்தது.

  • குசல் மெண்டிஸ் & டாம் பான்டன் :
    குசல் மெண்டிஸ் மற்றும் டாம் பான்டன் ஆகிய இரு வீரர்களை எந்த அணியும் இன்னும் ஏலம் எடுக்கவில்லை.

     

  • கிளாசென்:
    5.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபா அணிக்கு விற்கப்பட்டார்.

  • நிக்கோலஸ் பூரன்:
    நிக்கோலஸ் பூரன் அடிப்படை விலை 2 கோடியுடன் ஏலம் ஆரம்பித்தது. இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு பூரனை ஏலம் எடுத்தது. 

  • லிட்டன் தாஸ் ஏலம் போகவில்லை:
    அடிப்படை விலையான ரூ. 50 லட்சம் கொண்ட லிட்டன் தாஸ் இன்னும் ஏலம் போகவில்லை. சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை 2022ல் அவரது பர்பாமன்ஸ் நன்றாக இருந்தபோதிலும், அவர் விற்கப்படவில்லை.

     

  • விசில் போடு:

     

  • தற்போது அணியில் உள்ள வீரர்கள் மற்றும் இருப்பு விவரங்கள்:

  • ஐபிஎல் ஏலம் 2023 அதிக தொகைக்கு விற்கப்பட்டவர்கள்:
    சாம் குர்ரான், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இணைந்து முந்தைய ஐபிஎல் சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளனர். இதுவரை நடந்த இந்த ஏலம் லீக்கில் அதிக விலைக்கு போன மூன்று வீரர்கள் இவர்கள் ஆவார்கள்.

  • பென் ஸ்டோக்ஸ் யாருக்கு?
    கடும் போட்டிக்கு இடையில் இறுதியாக 6.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸ்-ஐ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

     

  • குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒடியன் ஸ்மித்
    குஜராத் டைட்டன்ஸ் அணி ஒடியன் ஸ்மித்தை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

  • பஞ்சாப் கிங்ஸ்: 
    சிக்கந்தர் ராசா 50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸுக்கு விற்கப்பட்டார்.

  • இரண்டாவது அதிக ஏலம்:
    மும்பை இந்தியன்ஸ் அணி 17.5 கோடி ரூபாய்க்கு கேமரூன் கிரீன் ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக விலையுள்ள வீரர் ஆவார்.

     

  • ரிலீ ரோசோவ்:
    தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி வீரர் ரிலீ ரோசோவ் ஏலம் போகவில்லை. அடிப்படை விலை ரூ.2 கோடி என்று இருந்த நிலையில், எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. 

  • ஜேசன் ஹோல்டர் 5.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு விற்கப்பட்டார்.

     

  • ஜோ ரூட் ஏலம் போகவில்லை:
    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஏலம் போகவில்லை. அடிப்படை விலை ரூ.1 கோடி என்று இருந்த நிலையில், எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. 

  • ரூ.18.50 கோடிக்கு சாம் கரணை ஏலத்தில் வாங்கியது பஞ்சாப் அணி.

     

  • மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது. 

  • இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை ரூ.50 லட்சத்திற்கு சென்னை அணி வாங்கியுள்ளது!

  • ஐபிஎல் 2023 மினி ஏலம்: ஹாரி புரூக்கை வாங்கியது எஸ்ஆர்எஹ் அணி

    இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கை 13.25 கோடிக்கு வாங்கியது எஸ்ஆர்எஹ் அணி. 

  • கேன் வில்லியம்சனை வாங்கியது குஜராத் டைடன்ஸ் அணி

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    2022 ஆம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்தில் முதலில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர் கேன் வில்லியம்சன். இவரை குஜராத் டைடன்ஸ் அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கினர். 

     

     

  • ஐபிஎல் டி20 தொடரின் 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம், கொச்சியில் தொடங்கியது

     

  • IPL Auction Streaming Platform: ஐ.பி.எல் 2023 மினி ஏலம்: ஆன்லைனில் ‘லைவ்’ பார்ப்பது எப்படி?

    ஐபிஎல் 2023 ஏலத்தின் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கை ஜியோ சினிமாவில் (Jio Cinema) பார்க்கலாம்.

  • இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது ஐபிஎல் 2023 மினி ஏலம்

  • ஐபிஎல் ஏலம் 2023: ஒவ்வொரு அணியிடம் உள்ள தொகை மற்றும் நிரப்பப்படும் வீரர்கள் விவரம்

     

  • IPL Mini Auction LIVE: அதிக ஏலத்தைப் பெறக்கூடிய வீரர்கள்
    ஆஸ்திரேலியா வீரர் கெமரூன் கிரீன்.
    இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.
    இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன்.

     

  • ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்
    கிறிஸ் மோரிஸ்: 16.25 கோடி
    யுவராஜ் சிங்: 16 கோடி
    பாட் கம்மின்ஸ்: 15.5 கோடி
    இஷான் கிஷன்: 15.25 கோடி
    கைல் ஜேமிசன்: 15 கோடி

  • IPL Mini Auction LIVE: ஐபிஎல் அணிகளிடம் உள்ள மீத தொகை

  • IPL Mini Auction LIVE: எந்த வீரர்கள் விற்கப்படுவார்கள் மற்றும் தக்கவைக்கப்படுவார்கள்?

     

  • IPL Mini Auction LIVE: CSK சாய்ஸ் என்ன
    சென்னை அணியை பொறுத்தவரை, சாம் கரணையும், மனிஷ் பாண்டேவையும் ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • IPL Mini Auction LIVE: RCB எப்போதும் எனது அணியாக இருக்கும் - கிறிஸ் கெயில்
    ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார் கிறிஸ் கெயில்.

  • IPL Mini Auction LIVE: மெகா ஏலத்தை மிஞ்சிய மினி ஏலம்
    ஐபிஎல் 2023 தொடரை முன்னிட்டு நடைபெறும் மினி ஏலம், கேரளா மாநிலம் கொச்சியின் போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட் சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது.

  • IPL 2023 Mini Auction LIVE updates: CSK கேப்டன் இவர்தான்
    தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கேவுக்கு அடுத்த கேப்டனாக சாம் கரன்தான் இருப்பார் இந்த மினி ஏலத்தில், அவரை வாங்க சிஎஸ்கே அதிகபட்சமாக 16 கோடி வரை செலவு செய்ய வாய்ப்புள்ளது என்றார்.

  • IPL 2023 Mini Auction LIVE updates: வணக்கம்!

    வணக்கம் மற்றும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 மினி-ஏலத்தின் நேரடி ஒளிபரப்பிற்கு வரவேற்கிறோம். விற்பனையாகாமல் இருக்கும் புதிய அணியைப் பெறும் ஒவ்வொரு வீரரின் அனைத்து முக்கிய அறிவிப்புகளையும் நாங்கள் உங்களுக்கு எடுத்துச் செல்வோம். காத்திருங்கள்!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link