Ravichandran Ashwin: இந்தியாவின் புகழ்பெற்ற ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை ஒப்பிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா இருவரில் இந்தியாவின் சிறந்த கேப்டன் யார் என்பதைக் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகேந்திர சிங் தோனி


மகேந்திர சிங் தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்று தந்துள்ளார். மகேந்திர சிங் தோனியின் தலைமையின் கீழ், இந்தியா 2007 ஐசிசி உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றுள்ளது. இது தவிர, 2009ல் முதல் முறையாக டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை இந்திய அணி பிடித்தது. மறுபுறம் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா ஒரு ஐசிசி கோப்பையைக் கூட இதுவரை வென்றதில்லை.


மேலும் படிக்க - விராட் கோலி 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு? பிசிசிஐ போடும் கண்டிஷன்


முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத்துடன் தனது யூடியூப் சேனலில் உரையாடிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின், மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை ஒப்பிட்டு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


மகேந்திர சிங் தோனி Vs ரோஹித் சர்மா


'இந்திய கிரிக்கெட்டைப் பார்த்தால், மகேந்திர சிங் தோனி சிறந்த கேப்டன் என்று எல்லோரும் சொல்வார்கள், ஆனால் ரோஹித் சர்மா ஒரு சிறந்த நபர். ரோஹித் சர்மா அணியின் ஒவ்வொரு வீரரையும் புரிந்து கொள்கிறார். ரோஹித் சர்மாவுக்கு எல்லோருடைய விருப்பு வெறுப்புகளும் தெரியும். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே நல்ல புரிதல் உள்ளது. அவர் ஒவ்வொரு வீரரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ள முயற்சிப்பார் எனக் கூறினார்.


மேலும் படிக்க - உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கேப்டன் ரோஹித் வாய்ப்பளிக்கவில்லை -அஸ்வின்


2023 உலகக் கோப்பை வாய்ப்பு


ரவிச்சந்திரன் அஸ்வின் 2023 உலகக் கோப்பையில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். அக்டோபர் 8 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு, இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்வில்லை. இருப்பினும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இது குறித்து எந்த கவலையும் புகாரும் இல்லை. 


ரோஹித்தின் இடத்தில் நான் இருந்திருந்தால்..


இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுகையில், 'மற்றொருவரின் இடத்தில் நின்று அவரது கண்ணோட்டத்தில் பார்ப்பது போன்றது. ரோஹித்தின் இடத்தில் நான் இருந்திருந்தால் வெற்றி கூட்டணியை மாற்றுவது பற்றி 100 முறை யோசித்திருப்பேன். இது அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது. மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்தல், ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். முதலில் அணியின் வெற்றியே முக்கியமானது, அதன்பிறகு தான் மற்ற விஷயங்கள் எனக் கூறினார்.


மேலும் படிக்க - காயங்களுடன் களம் புகப்போகும் சஞ்சு சாம்சன்..! டிராவிட் கொடுத்த கடைசி வாய்ப்பு - விடிவுகாலம் கிடைக்குமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ