அபுதாபி கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் லூயிஸ் ஹாமில்டனை வீழ்த்திய மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் வெற்றிக்கு மெர்சிடிஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அபுதாபி கிராண்ட் பிரிக்ஸில் வெற்றி பெற்று ஏழு முறை ஃபார்முலா ஒன் (Formula 1 World Championship) உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டனை, ரெட்புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் வீழ்த்தி 2021 பட்டத்தை வென்றார். கடைசி லேப்பில் வெற்றிபெற்ற மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் வெற்றிக்கு மெர்சிடிஸ் எதிர்ப்பு தெரிவித்தது.


தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக பட்டத்தைப் பெற்று வரும் மெர்சிடிஸ் அணி, கார் பந்தய வீரர்களை உருவாக்குவதில் பெயர் பெற்றது. தனது அணியின் லூயிஸ் ஹாமில்டன் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக  பட்டம் பெற்று வரும் நிலையில் மெர்சிடிஸ் இந்த எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.


பாதுகாப்பு கார் பந்தயத்தில் விளையாட்டு விதிமுறைகளை இரண்டு முறை மீறியதால் தாமதமானதை மெர்சிடிஸ் சுட்டிக்காட்டியுள்ளது. போட்டியின் முடிவில் நிறுவப்பட்ட வகைப்பாட்டிற்கு எதிராக மெர்சிடிஸ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிரிவு 48.12ஐ (article 48.12) மீறுவதாக வாதிட்டதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.


READ ALSO | கார் பந்தய வீரர் ஜெய் மூன்றாண்டுகளுக்கு பிறகு சென்னை MMRT களத்தில்


வழக்கமான நடைமுறையில் அனைத்து லேப்டு கார்களுக்கும் பதிலாக, இரண்டு டைட்டில் போட்டியாளர்களுக்கு இடையே உள்ள ஐந்து லேப்டு கார்களை மட்டுமே அன்லாப் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ரேஸ் டைரக்டர் மைக்கேல் மாசி (Race director Michael Masi) முடிவெடுத்தார், 


பந்தயம் மீண்டும் தொடங்கும் முன்,விதியை மீறி, ஹாமில்டனின் கார் முன் வெர்ஸ்டாப்பனின் கார் நகர்ந்தது என்றும் மெர்சிடிஸ் கூறுகிறது.  பாதுகாப்பு கார், பந்தயப் பாதையில் இருக்கும்போது, ​​அனுமதி கொடுக்கப்படும் வரை அதை முந்திச் செல்வது சட்டவிரோதமானது.


ஹாமில்டனின் வெற்றியை எதிர்த்து புகார் அளித்திருக்கும் மெர்சிடிஸ், விசாரணை முடிவடையும் வரை மேலும் கருத்து எதுவும் தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.


ALSO READ | கனமழை கரணமாக NASCAR கோப்பை மோட்டார் கார் பந்தயம் ஒத்திவைப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR