புதுடெல்லி: இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய அணி மற்றும் அதன் வீரர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை அவ்வப்போது வெளியிடுகிறார். இப்போது சமூக ஊடகங்களில் ஒரு இந்திய வீரரால் அவர் கடுப்பாகி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷயம் என்னவென்றால், மைக்கேல் வாகனால் இந்நாட்களில் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபரின் கருத்துகளையும் வார்த்தைகளையும் சகித்துக்கொள்ள முடிவதில்லை. வாசின் ஜாஃபர் அவ்வப்போது மைக்கேல் வாகனை ட்விட்டரில் வம்புக்கு இழுத்து அவருக்கு சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறார். 


மைக்கேல் வாகன் யாரை பிளாக் செய்ய விரும்புகிறார்?


ஒரு கிரிக்கெட் வலைத்தள நேர்காணலின் போது, ​​ரேபிட் ஃபையர் ரவுண்டில் எந்த கிரிக்கெட் வீரரை அவர் சமூக ஊடகங்களில் பிளாக் செய்ய விரும்புகிறார் என்று மைக்கேல் வாகனிடம் (Michael Vaughan) கேட்கப்பட்டபோது, அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் பெயரை கூறினார். சமீபத்திய காலங்களில் பல சந்தர்ப்பங்களில், சமூக ஊடகங்களில் மைக்கேல் வாகன் இந்தியா பற்றி கூறும் சர்க்கைக்குரிய கருத்துகளுக்கு வாசிம் ஜாஃபர் சரியான பதிலடியை அளித்துள்ளார். ஆகையால், மைக்கேல் வாகனால் வாசிம் ஜாஃபரின் கருத்துகளையும் வார்த்தைகளையும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஆகையால் வாகன் ஜாஃபரை பிளாக் செய்ய விரும்புகிறார்.


ALSO READ: அஸ்வின், ஜடேஜா பந்துவீச்சால் அச்சம்: உலகக் கோப்பைக்கு முன் New Zealand வீரரின் வெளிப்பாடு


மைக்கேல் வாகன் கோஹ்லி குறித்து சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்


சில நாட்களுக்கு முன்பு, மைக்கேல் வாகன் இந்திய அணியின் (Team India) கேப்டன் விராட் கோலி குறித்து ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார். 
'கேன் வில்லியம்சன் ஒரு இந்தியராக இருந்திருந்தால், அவர் இன்று உலகின் சிறந்த வீரராக இருந்திருப்பார். ஆனால், அப்படி இல்லை. ஏனென்றால், நீங்கள் அப்படி சொல்ல உங்களுக்கு அனுமதில் இல்லை. ஏனென்றால் உங்களிடம் விராட் கோலி உள்ளார்.


கேன் வில்லியம்சால் விராட் கோலிக்கு (Virat Kohli) சமமாக போட்டியிட முடியாது என நீங்கள் கூறுவீர்கள். விராட் கோலி போல கேன் வில்லியம்சன்னுக்கு இன்ஸ்டாகிராமில் 100 மில்லியன் ஃபாலோயர்கள் இல்லை. ' என்று மைகேல் வாகன் கூறியிருந்தார். 
 


சரியான பதிலடி கொடுத்தார் வாசிம் ஜாஃபர்
கடந்த சில சந்தர்ப்பங்களிலும் வாகனின் கூற்றுகளுக்கு வாசிம் ஜாஃபர் தன் பாணியில் ஒரு பொருத்தமான பதிலை அளித்துள்ளார். இந்த முறை, ஜாஃபர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோஷனின் ஆதரவைப் பெற்று மைக்கேல் வாகனை தேவையில்லாமல் தலையிடும் நபர் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் மைக்கேல் வாகனை வெகுவாக கடுப்பேற்றியுள்ளது.  


தனக்கு கிடைத்த பதிலடிகளுக்குப் பிறகு மைக்கேல் வாகன் வாசிம் ஜாஃபர் மீது கடுப்பாகி உள்ளார். நாம் ஒரு வினையை விதைத்தால் அதற்கான எதிர்வினையையும் அனுபவித்துதான் ஆகவேண்டும்!!


ALSO READ: மெகா அப்டேட்! செப்டம்பரில் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ தகவல் லீக்
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR