இங்கிலாந்து அணி இப்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. அதாவது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரை இழக்காமல் 2-2 என சமனில் முடித்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி அடுத்த 2 போட்டிகளில் அபாரமாக விளையாடி தோல்வியில் இருந்து மீண்டு வந்ததுடன் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக சாய்த்து வெற்றிக்கொடி நாட்டியது. கிரிக்கெட் ரசிகர்களை பொறுத்தவரை இந்த டெஸ்ட் தொடர் சிறப்பாக இருந்ததாக பூரிப்புடன் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அணியும் செம உற்சாகத்தில் இருக்கும் நிலையில், அடுத்த சில மாதங்களுக்கு டெஸ்ட் தொடருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இஷான் கிஷனின் மூன்றாவது அரைசதம், அவரை தோனியின் சாதனையை தொட வைத்தது


அடுத்ததாக இந்தியாவில் ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் அதில் அனைத்து அணிகளும் கவனம் செலுத்த இருக்கின்றன. அந்த தொடருக்குப் பிறகே மீண்டும் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை உலக கோப்பைக்குப் பிறகு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை டெஸ்ட் தொடரில் சந்திக்க இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 


இந்த தொடரில் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடிய செய்தி இப்போதே வெளியாகியிருக்கிறது. அப்போது இந்தியா வரும் இங்கிலாந்து அணியில் 2 ஸ்டார் பவுலர்கள் அந்த அணியில் இருக்க மாட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட் உலகில் கோலோச்சிக் கொண்டிருந்த ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் இங்கிலாந்து அணியில் இல்லாதது மகிழ்ச்சி என்றாலும், மொயீன் அலியும் அந்த அணியில் இருக்க மாட்டார்.


ஏற்கனவே டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மொயீன் அலி, ஆஷஸ் தொடருக்கு முன்பாக மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பினார். இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை செய்த அவர், ஸ்டுவர்ட் பிராட்டுடன் இணைந்து மீண்டும் ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனால் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை. இந்த தகவல் இந்திய அணியை பொறுத்தவரையும் நல்ல செய்தியாகும். குறிப்பாக விராட் கோலிக்கு. ஏனென்றால், இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலியை 10 முறை அவுட்டாக்கியிருப்பவர் மொயீன் அலி. அவரது பந்துவீச்சில் இருக்கும் மாயாஜாலம் விராட் கோலியை மட்டும் தேடிதேடி அவுட்டாக்கிவிடுவதால், இம்முறை அப்படியான சிறிய பயம் கூட கோலிக்கு இருக்காது.


மேலும் படிக்க | IND vs PAK: உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மாற்றம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ