இஷான் கிஷனின் மூன்றாவது அரைசதம், அவரை தோனியின் சாதனையை தொட வைத்தது

Ishan Kishan: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய இஷான் கிஷன், மூன்றாவது அரைசதத்தை அடித்து தோனிக்கு இணையானவராக உயர்ந்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 1, 2023, 11:57 PM IST
  • இஷான் கிஷனின் அபார சாதனை
  • தோனியின் சாதனையை தொட்ட இஷான் கிஷன்
  • இந்திய அணியின் சாதனைப் பட்டியலில் இஷான் கிஷன்
இஷான் கிஷனின் மூன்றாவது அரைசதம், அவரை தோனியின் சாதனையை தொட வைத்தது title=

புது டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் அரைசதம் அடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த மூன்றாவது அரைசதம் இதுவாகும்.

இஷான் கிஷன்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அபார சாதனை படைத்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஒரு பெரிய சாதனையை அவர் உருவாககினார்.

இஷான் கிஷன் மூத்த வீரர் தோனிக்கு இணையானவர்
இஷான் கிஷான் மேற்கிந்திய மண்ணில் தனது மூன்றாவது அரைசதத்தை அடித்தார். எம்எஸ் தோனிக்குப் பிறகு இந்த சாதனையை வேறு யாரும் செய்ததில்லை.

தற்போது, இந்த சாதனையை செய்த இந்தியாவின் இரண்டாவது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார் இஷான் கிஷன். மேற்கிந்தியத் தீவுகளில் தோனியின் பெயரில் மூன்று அரை சதங்கள் உள்ளன.

மேலும் படிக்க | IND vs WI: 3வது ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி இல்லை? வெளியான தகவல்!

சிறப்பு கிளப்பில் இஷான் கிஷன் 
மூன்று போட்டிகள் கொண்ட இருதரப்பு தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்கள் அடித்த ஆறாவது இந்திய வீரர் என்ற பெருமையை இஷான் கிஷன் பெற்றார். கே ஸ்ரீகாந்த், திலீப் வெங்சர்கார், முகமது அசாருதீன், எம்எஸ் தோனி, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் (இருதரப்பு) தொடரில் மூன்று அரைசதங்களுடன் இந்திய பேட்ஸ்மேன்கள்
கே ஸ்ரீகாந்த் VS இலங்கை 1982
திலீப் வெங்சர்க்கார் VS இலங்கை 1985
முகமது அசாருதீன் VS இலங்கை 1993
எம்எஸ் தோனி VS ஆஸ்திரேலியா 2019
ஷ்ரேயாஸ் ஐயர் vs நியூசிலாந்து 2020
இஷான் கிஷன் VS வெஸ்ட் இண்டீஸ் 2023

இஷான் கிஷான் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் 77 ரன்கள் குவித்தார். அவர் 64 பந்துகளில் இந்த ரன் எடுத்தார். இஷான் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை அடித்தார். அவர் ஷுப்மான் கில்லுடன் இணைந்து 143 ரன்களை தொடக்க பார்ட்னர்ஷிப்பில் எடுத்தார். ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 52 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்தார் இஷான் கிஷோர்.

மேலும் படிக்க | ஆஷஸ் 2023 தொடர் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News