ப்பா.. என்ன மனுசன்யா இவரு.. 40 வயதில் தல தோனியின் FIT!
40 வயதிலும் தோனியின் பிட்னெஸ் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிரிக்கெட் என்றாலே அனைத்து தரப்பினருக்கும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாகும். அதிலும் விளையாட்டு வீரர்களின் மேல் உள்ள அளவற்ற அன்பாலே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை கொடுக்கிறது என்பதை யாரலும் மறுக்க முடியாது. அத்தகைய அன்பு கலந்த ஒரு வீரர்தான் நம்ம “தல” தோனி. தோனியின் விளையாட்டு ஸ்டைலும், ”கேப்டன் கூல்”க்கு ஏற்ப பொறுமையும், இறுதி வரை போராடும் குணமும் அவரோட விளையாட்டை பார்ப்பதற்கு பல ரசிகர்கள் இன்றளவும் காத்திருக்கிறார்கள்.
மேலும் படிக்க | இந்த வீரர்களை நீக்க ரோகித் முடிவு - காரணம் இதுதான்
கிரிக்கெட் போட்டிகளில் இவருடைய திறன், ஸ்டைல், அணுகுமுறை என்று ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அவரோட வயது அதிகமானலும் திடமான,உறுதியான உடல் அமைப்பு மூலம் அவரோட ரசிகர்களுக்கு உடல் வலிமையில முன்னுதரானமாக திகழ்கிறார். இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் 26ம் தேதி முதல் தொடங்கி மே29ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. நடப்பு சாம்பியன் அணியான சென்னை அணி தங்களது வலை பயிற்சிகளை சூரத் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாள் வலை பயிற்சி முடிந்து வீரர்கள் உடைமாற்றும் அறையில் நெட் பவுலர் ஒருவருடைய பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தல தோனி பங்கேற்று கொண்டாடிய வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. அதில் தோனி உடல் கட்டமைப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இளம் வயது போல் இருந்தார். இதனையடுத்து அவரின் உடல் கட்டமைப்பு குறித்து இணையதளங்களில் 40வயதில் Look at Dhoni's Arm, biceps and triceps என்று ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தோனியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தோனி இல்லாத ஐபிஎல் பிளேயிங் 11 - ரசிகர்கள் அதிர்ச்சி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR