சிஎஸ்கே அணியை 6 முறை வெற்றி கோப்பையுடன் அலங்கரித்த தோனி,  இன்று யாரும் எதிர்பார்க்காத ஒரு செய்தியை அறிவித்துள்ளார்.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 12 ஆண்டுகள் இருந்த தோனி, இனி கேப்டனாக இருக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார்.  தனது கேப்டன் பதவியை ஜடேஜாவிடம் கொடுத்துள்ளார்.  இது சம்பந்தமாக சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சென்னை டீம் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி திடீர் விலகல்- புது கேப்டன் யார்?


அதில், தோனி  கேப்டன் பதவியை ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்து உள்ளார்.  ஜடேஜா சிஎஸ்கேவை வழிநடத்தும் மூன்றாவது வீரர். இந்த சீசனிலும் அதற்கு அப்பாலும் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு வீரராக செயல்படுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தோனி ஐபிஎல்லில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர். அவரது கேப்டன்சி சாதனைகள்:


- தோனி 204 ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார்.


- அவரது அணிகள் (CSK மற்றும் RPSG) 121 போட்டிகளில் வெற்றி பெற்றன, அதே நேரத்தில் 82 ஆட்டங்களில் தோல்வியடைந்தன. 


- ஐபிஎல் அணியின் கேப்டனாக தோனியின் வெற்றி சதவீதம் 59.60.


- 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தோனியின் தலைமையில் சிஎஸ்கே நான்கு ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளது.


- தோனியின் தலைமையில் 2010 மற்றும் 2014-ல் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களையும் வென்றுள்ளது.


- ஒன்றுக்கு மேற்பட்ட ஐபிஎல் பட்டங்களை வென்ற மூன்று இந்திய கேப்டன்களில் தோனியும் ஒருவர், மற்ற இருவர் ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர்.


- ஒன்றுக்கு மேற்பட்ட சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனி மட்டுமே.


- ஐபிஎல் அணிகளில் 200+ போட்டிகளுக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் தோனி மட்டுமே.


மேலும் படிக்க | ஐபிஎல்-ல் கடைசி ஓவரில் அதிக சிக்ஸ்சர்கள் அடித்தது இவரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR