பிசிசிஐ மற்றும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி (Dhoni) ஆகியோர் மூத்த வீரர்களை தவறாக நடத்தியதாகவும், முறையான விளக்கம் ஏதும் அளிக்காமல் இந்திய அணியில் இருந்து நீக்கியதாகவும் மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.  எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை சீக்கிரம் முடிவடைவதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம்.  யுவராஜ் சிங் மற்றும் கெளதம் கம்பீர் போன்ற மூத்த வீரர்களை இந்திய கிரிக்கெட் வாரியம் தவறாக நடத்தியதாக குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங், தோனியிடம் பாரபட்சமாக இருப்பதாகவும், பிசிசிஐ அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | இந்தியாவுக்கு எதிரான T20 அணியை அறிவித்தது மேற்கிந்திய தீவுகள்!


சமீபத்திய பேட்டியில் தோனியுடன் ஆனா உங்கள் உறவை பற்றி கேட்டபோது, "நான் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை, எனவே அவரை பற்றி நான் கவலைப்பட வேண்டியது இல்லை" என்று கூறி இருந்தார் ஹர்பஜன் சிங்.  இந்த கருத்து சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதற்கு விளக்கம் அளித்த ஹர்பஜன்,  தோனியுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும், நாங்கள் இத்தனை ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்ததாகவும் கூறினார்.  அதே சமயம், தான் சொன்ன கருத்துக்கள் பல ஆண்டுகளாய் தன் மனதில் இருந்தது என்று கூறினார்.  பிசிசிஐ தேர்வாளர்கள் மூத்த வீரர்களை புறக்கணித்தனர், அதை யாரும் மறக்க வேண்டாம் என்பதற்க்கே தெரியப்படுத்தினேன்.  



2012க்குப் பிறகு நிறைய விஷயங்கள் இந்திய அணியில் சிறப்பாக இருந்திருக்கும். சேவாக், நான், யுவராஜ், கௌதம் கம்பீர் அனைவரும் ஐபிஎல்-ல் (IPL) சிறப்பாக விளையாடினோம்.  2011 ஆம் ஆண்டின் சாம்பியன்கள் அணி மீண்டும் ஒன்றாக விளையாடவில்லையே! ஏன்? அவர்களில் சிலர் மட்டுமே 2015 உலகக் கோப்பையில் விளையாடினர், ஏன்? என்று ஹர்பஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.



இது குறித்து தான் விளையாடும் நாட்களில் தேர்வாளர்களிடம் விளக்கம் கேட்டதாகவும், ஆனால் அவர்கள் தங்கள் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும், முடிவுகள் எடுக்க முடியவில்லை என்றும் பதிலளித்தனர் என்று கூறியுள்ளார். சீனியர் வீரர்கள் இருந்தபோது புதியவர்களைக் கொண்டு வருவதில் என்ன பயன்? தோனி கேப்டனாக இருந்த சமயத்தில், சென்னை சூப்பர் கிங்ஸின் உரிமையாளரான என். சீனிவாசன் BCCI தலைவராக இருந்தார், மேலும் அவர்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஆட்சி செய்தவர்கள். யாரோ ஒருவரின் உத்தரவின் பேரில் தேர்வாளர்கள் அந்த முடிவுகளை எடுத்ததாகக் கூறுவதன் மூலம், ஹர்பஜன் தோனி மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவரை மிகவும் புத்திசாலித்தனமாக குறிவைத்துள்ளார்.  


ALSO READ | CAPTANICY: கேப்டனாக தோனியும் நானும்! மனம் திறக்கும் விராட் கோலி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR