பைக்கை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் தோனி! வைரலாகும் வீடியோ!
இந்திய முன்னாள் கேப்டன் தோனி தனது வீட்டின் முன் தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை பற்றிய அறிமுகம் தேவையில்லை. தோனிக்கு பைக்குகள் மற்றும் கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்கள் மற்றும் பைக்குகளுக்கு தனி அறையே வைத்துள்ளார், அது அவருடைய சேகரிப்பிலும் தெளிவாக பிரதிபலிக்கிறது. தோனி தனது கேரேஜில் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று Yamaha RD350 ஆகும். இது ஒரு சிறந்த மோட்டார் சைக்கிள் மற்றும் சேகரிப்பாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிள் ஆகும். MS தோனி இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை வைத்திருக்கிறார், தோனி தனது யமஹா RD350 மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய சிரமப்படும் வீடியோவை இங்கே காணலாம்.
மேலும் படிக்க | Ind vs SL: 155கிமீ வேகத்தில் பந்து வீசிய உம்ரான் மாலிக்! என்ன ஆனது என்று பாருங்கள்!
இந்த வீடியோ பிரபலமான யூடியூப் சேனலில் பகிரபட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தோனியின் இல்லத்திற்கு வெளியே தோனியைப் பார்க்க காத்திருந்த சில இந்த வீடியோவை எடுத்துள்ளனர். முதலில் அவரது மனைவி சாக்ஷி தனது Mercedes-Benz SUV யில் வெளியே செல்வதை பார்த்துள்ளனர்.
அப்போது, தோனியின் வீட்டின் கதவுகள் திறப்பதைக் கண்டனர், மேலும் தோனி தனது யமஹா ஆர்டி350 மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குள் சென்றார். தோனி உள்ளே நுழைந்தவுடன், வாயில்கள் மூடப்பட்டன, ஆனால், தோனி தனது யமஹா RD350ஐ ஸ்டார்ட் செய்ய சிரமப்படுவதை வீடியோவாக பதிவு செய்தனர்.
தோனியின் இல்லத்தில் இருந்த பாதுகாப்புப் படையினர் அந்த வீடியோ எடுப்பதைத் தடுக்க முயன்றனர், இருப்பினும் வீடியோ பதிவானது. எம்எஸ் தோனி பைக்கை தள்ளுவது போல் தெரிகிறது. தோனி மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்ய முயற்சிக்கிறார். பல முயற்சிகளுக்குப் பிறகு, தோனி பைக்கை ஸ்டார்ட் செய்து ஓட்டினார். எம்எஸ் தோனி விலை உயர்ந்த கார்கள் மற்றும் எஸ்யூவிகளை ஓட்டும் பல வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். மேலும் பலமுறை பைக் ஓட்டி வந்துள்ளார். அனேகமாக இதுபோல் நடப்பது இதுவே முதல் முறை.
பைக்குகளுடன், எஸ்யூவி மற்றும் கிளாசிக் கார்களும் தோனிக்கு பிடிக்கும். அவரிடம் 1969 ஃபோர்டு மஸ்டாங், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ, போண்டியாக் டிரான்ஸ்-ஆம், ஹம்மர் எச்2, நிசான் 1 டன் போன்ற கார்கள் உள்ளன. அவரது கேரேஜில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கார்களில் ஒன்று கியா EV6 எலக்ட்ரிக் கார். தோனி தனது புதிய கியா EV6 இல் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் அமர்ந்திருந்தார். EV6 இந்தியாவில் கியாவின் முதன்மையான எலக்ட்ரிக் கார் ஆகும், இது CBU ஆக விற்கப்படுகிறது. இது குறைந்த எண்ணிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கியா ஏற்கனவே 200 யூனிட்களுக்கு மேல் EV6 விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ