ஐபிஎல் 2024: தோனி போட்ட பிளான்..! இம்பாக்ட் பிளேயராக களமிறங்க திட்டம்
MS Dhoni IPL 2024: ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி இம்பாக்ட் பிளேயராக களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎஸ்கே அணி புதிய கேப்டன் தலைமையில் களமிறங்கும் என்றும் கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டு இம்பாக்ட் பிளேயராக விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. அவர் ஏற்கனவே முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதால், பேட்டிங் செய்வது தோனிக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. கடந்த ஆண்டு சில போட்டிகளில் ஒன்றிரண்டு ரன்கள் ஓடி எடுக்க கஷ்டப்பட்டார். அதனால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இம்பாக்ட் பிளயேர் விதியை தனக்கு பயன்படுத்திக் கொள்ள இருக்கிறாராம். அதாவது பீல்டிங் மட்டும் வந்து செய்யலாம், பேட்டிங்கின்போது பெவிலியனிலேயே அமர்ந்து கொள்ளலாம் என இருக்கிறாராம். அப்படி இருக்கும்பட்சத்தில் அவருக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ருதுராஜ் கெய்க்வாட் ஏற்பார்.
மேலும் படிக்க | டெஸ்ட் முதல் டி20 உலக கோப்பை வரை! 2024ல் இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனிக்கு பிறகு அதிக ஆண்டுகள் வழிநடத்தக்கூடிய திறமை கொண்ட பிளேயரை தான் சிஎஸ்கே நிர்வாகம் தேடிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எதிர்பார்ப்பை முழுமையாக புரிந்து கொண்ட இளம் வீரராகவும், அந்த அணியுடன் அதிக நாட்கள் பயணித்தவராகவும் ருதுராஜ் இருக்கிறார். மேலும், தோனியின் பெரும் நம்பிக்கையை பெற்றவராகவும் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். அதனால் ஐபிஎல் 2024 தொடரின்போது கேப்டன் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துவிடும் எண்ணத்தில் தான் தோனி இருக்கிறார்.
இது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அண்மையில் கூறியபோது, ஐபிஎல் 2024 தொடரின்போது தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பதை அவரே முடிவு செய்வார். மற்றபடி நாங்கள் கருத்து ஏதும் இந்த விஷயத்தில் சொல்ல மாட்டோம் என தெரிவித்தது. விளையாடுவார் என்றால் கன்பார்மாக சிஎஸ்கே நிர்வாகம் இதனை கூறியிருக்கும், ஆனால் பொடி வைத்து பேசுவதால் தோனி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது என இதன் மூலம் அறிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் சந்தேக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து தோனி பேசும்போது, நான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை என்னுடைய உடல் முழுமையாக அதற்கு ஒத்துழைக்காதபட்சத்தில் கிரிக்கெட்டுக்கு விடைகொடுத்தாக வேண்டும். ஆனால் இதுகுறித்து யோசிக்க இன்னும் நேரம் இருப்பதாகவே கருதுகிறேன் என கூறியிருந்தார். ஒருவேளை இம்பாக்ட் பிளேயர் விதி இருப்பதை மனதில் வைத்துக் கொண்டே தோனி இப்படி சொல்லியிருக்கிறார். ஏனென்றால், இம்பாக்ட் பிளேயர் விதியில் பேட்டிங் அல்லது பீல்டிங் மட்டும் செய்யும் வாய்ப்பு இருப்பதால், இதனை தோனி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | சச்சினை விட பெஸ்ட் பிளேயர் இவர் தான் என நினைத்த ஆஸ்திரேலிய அணி - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ