மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியாக உள்ளது - ஜெயவர்தனே சொல்லும் காரணம்
ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்தபோதும் மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியாக இருப்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.
தோல்வியால் துவண்டு இருந்தாலும், மகிழ்ச்சியடைவதற்கான செய்திகளும் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருப்பதாக பயிற்சியாளர் மகிலா ஜெயவர்தனே கூறியுள்ளார். 2 வீரர்களின் ஆட்டம் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அதனால் மகிழ்ச்சியில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
யார் அந்த 2 வீரர்கள்?
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இது குறித்து பேசிய பயிற்சியாளர் மகிலா ஜெயவர்தனே, இந்த சீசன் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், ராஜஸ்தான் அணிக்கு எதிராக வெற்றியை பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய அவர், அந்த ஆட்டத்தில் மும்பை வீரர்கள் பந்துவீசிய விதம் பாராட்டுக்குரியது எனக் கூறியுள்ளார்.
ஜெயவர்தனே பேசும்போது, " ஜோஸ் பட்லர் ஹிருத்திக் ஷோக்கீன் பந்தில் நான்கு சிக்ஸர்களை அடித்தபோது, அவரது விக்கெட் வீழ்த்தும் அணுகுமுறை மிகவும் நன்றாக இருந்தது. குமார் கார்த்திகேயா அற்புதமாக பந்துவீசினார். இதற்காக அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டும் சிறப்பாக அமைந்ததால் தங்களால் வெற்றி பெற முடிந்தது" என தெரிவித்துள்ளார்.
பிளே ஆஃப் வாய்ப்பில்லை
8 தோல்விகளை சந்தித்த மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. இதுகுறித்து ஜெயவர்தனே பேசும்போது, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் போட்டியை முடிக்கும் வாய்ப்பு இருந்ததாக தெரிவித்துள்ளார். அதனை சரியாக செய்யாததால் வெற்றிக்கு அருகில் சென்று சில தோல்விகளை சந்திக்க வேண்டியதாக தெரிவித்துள்ள அவர், இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் மொத்த அணிக்கும் அது ஊக்கமாக இருக்கும் எனக் கூறினார்.
மும்பை அணி
மும்பை அணி, இந்த ஏலத்தில் இளம் வீரர்களுக்கு அதிக முதலீடு செய்தது. இதனால், பந்துவீச்சில் குமார் கார்த்திகேயா மற்றும் ஹிர்த்திக் ஷோக்கீன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்த திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். திலக் வர்மா பேட்டிங்கில் முத்திரை பதித்து வருகிறார். அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாடி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உயர்ந்துள்ளார். இன்றைய போட்டியில் மும்பை அணி, குஜராத் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR