சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடிய வார்னர், அகில உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 6, 2022, 08:39 AM IST
  • 20 ஓவர் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த வார்னர்
  • பல்வேறு அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்
  • அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம்
சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் -  அகில உலக சாதனை title=

ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்ததுடன், புள்ளிப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் அரைசதம் விளாசிய டேவிட் வார்னர், பல்வேறு அரிய சாதனைகளுக்கு சொந்தக்காரரானார். 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில். மொத்தம் 88 அரைசதங்களை இருபது ஓவர் கிரிக்கெட்டில் விளாசியுள்ளார்.

அந்த சாதனையை கெத்தாக நேற்று முறியடித்துள்ளார் டேவிட் வார்னர். சன்ரைசர்ஸூக்கு எதிராக 58 பந்துகளில் 92 ரன்களை குவித்த வார்னர், இருபது ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 89 சதங்களை விளாசி முதல் இடத்துக்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி 77 அரைசதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறினார். 

மேலும் படிக்க | டெல்லிக்கே பயம் காட்டிய சூரியன்! திரில் வெற்றி பெற்றது பந்த் அணி

இதேபோல் ஐபிஎல் தொடரில் அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ வென்ற ரோஹித்தின் சாதனையை சமன் செய்துள்ளார். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா இதுவரை 18 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற டேவிட் வார்னர், இந்த சாதனையையும் சமன் செய்துள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரை அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் டிவில்லியர்ஸ் 25 முறை வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் கிறிஸ் கெயில் 22 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். 

ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலிலும் முத்திரை பதித்துள்ளார் வார்னர். சன்ரைசர்ஸூக்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தவர்கள் லிஸ்டில் சுரேஷ் ரெய்னாவை சமன் செய்திருக்கிறார். இந்தப் பட்டியலிலும் டிவில்லியர்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 23 ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்துள்ளார். ஷிகர் தவான் 21 முறை ஆட்டமிழக்காமல் அரைசதமடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த விஷயத்தில் மகேந்திர சிங் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். தோனி 20 ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்துள்ளார்.

மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விக்கு தோனியை கைகாட்டும் சேவாக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News