இன்றைய ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடருக்கு புதியதாக களமிற்கியிருந்தாலும், சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குஜராத் டைட்டன்ஸ். அந்த அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் அந்த அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க | சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை
ஏறக்குறைய அந்த அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இன்றைய போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல காத்திருக்கிறது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் படுமோசமாக இருக்கிறது. 5 முறை சாம்ப்யன் என்றாலும், இந்த தொடரில் தொடர்ச்சியாக 8 தோல்விகளை சந்தித்து, ஐபில் வரலாற்றிலேயே 8 தோல்விகளை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் உட்பட யாரும் சொல்லிக் கொள்ளும்படி இதுவரை விளையாடவில்லை.
அதிகவிலை கொடுத்து வாங்கப்பட்ட இஷான் கிஷன், ஒரு போட்டியில் கூட எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால் அவருக்கு மும்பை அணி மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆல்ரவுண்டர் மற்றும் அதிரடி மன்னன் கைரன் பொல்லார்டும் பேட்டிங்கில் ஜொலிக்கவில்லை. பந்துவீச்சை பொறுத்தவரை பும்ராவுக்கு இணையாக பந்துவீசுமளவுக்கு அணியில் யாரும் இல்லை. இளம் வீரர் திலக் வர்மா மட்டும் ஓரளவுக்கு விளையாடி வருகிறார். இதனால், பலம் வாய்ந்த குஜராத் டைட்டன்ஸ் அணியை, மும்பை இந்தியன்ஸ் அணி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
குஜராத் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, கடந்த சீசன் வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்தார். ரீட்டெயின் லிஸ்டில் அவருக்கான இடத்தை மும்பை கொடுக்க தவறியதால், அணியில் இருந்து வெளியேறிய அவர், குஜராத் டைட்டன்ஸூக்கு கேப்டனாக மாறி, அணியையும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதனால், தனிப்பட்ட முறையில் மும்பையை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும். அதேபோல், ஹர்திக் பாண்டியா அணியிடம் தோல்வியடையக்கூடாது என்ற எண்ணம் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு இருக்கும். இப்படியான சூழலில் தான் இரு அணிக்கும் இன்றைய போட்டியில் நேருக்கு நேர் மோத உள்ளன.
மேலும் படிக்க | சிஎஸ்கே தோல்விக்கு தோனியை கைகாட்டும் சேவாக்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR