IPL 2019 தொடரின் 19-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 19-வது லீக் ஆட்டம் இன்று ஹதிராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சன் ரைஸஸ் ஹைதிராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதிராபாத் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா 11(14) மற்றும் குவிண்டன் டி காக் 19(18) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேறினர். கிரண் பொல்லாற்டு அதிரடியாக விளையாடி 46(26) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்தது. 


இதனையடுத்து 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதிராபாத் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். அணியில் அதிகபட்சமாக தீபக் ஹூடே 20(24) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 17.4-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஹைதிராபாத் அணி 96 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. மும்பை வீரர் அல்ஜாரி ஜோசப் 6 விக்கெட் குவித்து தங்கள் அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இதனையடுத்து மும்பை அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் மும்பை அணி IPL புள்ளி பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.