3x3 Basketball Tournament: 'த்ரீ எக்ஸ் த்ரீ' (3x3) எனப்படும் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இன்று முதல் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் நாடு முழுவதும் இருந்து 30 மாநில ஆடவர் அணிகளும், 25 மாநில பெண்கள் அணியினரும் பங்கேற்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டிகளில் முதல் 7 இடங்கள் பிடிக்கும் அணிகள் வரும் அக்டோபர் 23ஆம் தேதி கோவாவில் நடைபெறும் 37ஆவது தேசிய கூடைப்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளன.  


அதன்படி முதல் இடம் பிடிக்கும் அணிக்கு 3 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் ரூபாயும், மூன்றாவது இடம் பிடிக்கும் அணிக்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட இருக்கிறது. இன்று முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளை இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைத்துள்ளது.


மேலும் படிக்க | புதிய ஜெர்சி இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தரும்! ரசிகர்களின் உற்சாகம்


ஒரு அணியில் 3 பேர் மட்டும்...!


இது தொடர்பாக  செய்தியாளர்களை சந்தித்த கூடைப்பந்து சம்மேளன தலைவர் ஆதவ் அர்ஜுனா, "நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் அணிக்கு 3 வீரர்கள் இடம்பெறுவார்கள். இந்த போட்டிகள் கூடைப்பந்து விளையாட்டின் அரை மைதானத்தில் விளையாடப்படும்.



ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு போதிய கட்டமைப்புகளை உருவாக்கியும், அகாடமிகளை உருவாக்கி வீரர்களை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த வீரர்களை உருவாக்க முடியும்.  தமிழ்நாட்டில் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தற்போது நிறைய நடத்தி வருவது வரவேற்கக் கூடியது. முன்பெல்லாம் உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்த வேண்டும் என்றால் அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படுவதில் கால தாமதமாகும். 


உடனே ஒப்புதல் அளிக்கும் தமிழக அரசு


ஆனால் தற்பொழுது செஸ் ஒலிம்பியாட்டாகட்டும், ஆசிய ஹாக்கி போட்டிகளாகட்டும் இவைகளுக்கு ரூ.100 கோடி, ரூ. 30 கோடி என உலக அளவிலான போட்டிகளாக இருந்தாலும் சரி, தேசிய அளவிலான போட்டிகளாக இருந்தாலும் சரி அதற்கான நிதிக்கு உடனடியாக தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது.  கிராமங்கள் முதல் அனைத்து இடங்களிலும் 3×3 போட்டிக்கான வீரர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார். 


மேலும் படிக்க | உலககோப்பை 2023: நெதர்லாந்து அணிக்கு நெட் பவுலரான சென்னை டெலிவரி பாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ