தோனிக்கு இருந்த திருமண ராசி ரோஹித்துக்கு இல்லையா... கிளம்பும் புது கதை - என்ன தெரியுமா?
ICC World Cup: உலகக் கோப்பை வென்ற ரிக்கி பாண்டிங், தோனி, மோர்கன் ஆகியோருக்கு இந்த அந்த ராசி கம்மின்ஸிடம் இருந்ததாகவும், அது ரோஹித்திடம் மிஸ்ஸிங் எனவும் சமூக வலைதளத்தில் ஒரு கருத்து பரவி வருகிறது.
ICC World Cup: நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தி 6ஆவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றியது. உலகக் கோப்பைக்கு முன்னர் ஜோதிடர்கள், நெட்டிசன்கள் என பலரும் பல விதமான கணிப்புகளை அள்ளி வீசினர். அதில் ஒரு கணிப்பு தற்போது பலித்துள்ளது. அந்த மீமை பலரும் பகிர்ந்து வருகின்றனர். கப் வேணும்ன்னா கல்யாணம் பண்ணிக்கோ, பிகிலு என்பது தான் அந்த தாரக மந்திரம். அந்த மீம் என்ன என்பதையும், இந்த தாராக மந்திரத்தை குறித்தும் இதில் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா கேப்டனாக இருந்த ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) 2002ஆம் ஆண்டில் திருமணம் செய்த நிலையில், 2003ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். குறிப்பாக, அந்தாண்டு இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக பாண்டிங் 140 ரன்களை குவித்து இந்திய ரசிகர்களை மனதை சல்லிசல்லியாக நொறுக்கியதை யாராலும் மறக்க முடியாது. 2003 மட்டுமின்றி 2007 உலகக் கோப்பையும் பாண்டிங் வென்று கொடுத்தார்.
2010ஆம் ஆண்டில் தோனி (MS Dhoni) தன் பள்ளித் தோழியான ஷாக்சியின் கைகளை பற்றிய அதே வேகத்தோடு 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு உலகக் கோப்பையையும் கைப்பற்றி கொடுத்தார். அதற்கு முன்னரே அவர் 2007இல் டி20 உலகக் கோப்பையை வென்றிருந்தார். தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்தார்.
தொடர்ந்து, 2018ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயான் மோர்கன் (Eoin Murugan) திருமணம் செய்து கொண்ட நிலையில், மூன்று முறை இறுதி போட்டி வரை வந்து தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி 2019இல் ஒரு வழியாக கோப்பையை வென்றது.
கடைசியா அதே பாணியில், தற்போதைய ஆஸ்திரேலியா அணி கேப்டன் பேட் கம்மின்ஸ், கடந்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டில் திருமணம் செய்திருந்தார். ஆனால் பேட் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் ஜோடிக்கு 2021ஆம் ஆண்டிலேயே குழந்தை பிறந்தது தனிக்கதை. அது எப்படி கல்யாணம் பண்ணாம குழந்தை பிறக்கும்ன்னு கேட்டா நீங்க தான் அந்த அப்பாவி 90'ஸ் கிட்ஸ். நேற்று நடந்த உலகக் கோப்பையில் பத்து ஆட்டத்தில் தோற்காத இந்தியா அணியை அடித்து நொறுக்கி கோப்பையை வென்று புலம்ப வைத்துள்ளார், பேட் கம்மின்ஸ்.
இதனால் சொல்ல வருவது என்னவென்றால்...
இந்த சம்பவங்களில் மூலமே உங்களுக்கு புரிந்திருக்கும். அதாவது, புதிதாக கல்யாணம் ஆகி களம் இறங்கிய எல்லா கேப்டனுக்கும், கல்யாணப் பரிசாக உலகக் கோப்பை கிடைத்துள்ளது. இதனால், அடுத்த உலகக்கோப்பை 2027ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா - நமீபியா - ஜிம்பாப்வே உள்ளிட்ட நாடுகளில் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதனால், உலகக் கோப்பை வேண்டும என்கிற பட்சத்தில் 2026ஆம் ஆண்டில் திருமணம் மேற்கொள்பவரை கேப்டனாக நியமித்து கோப்பை பெற்றுக்கொள்ளும்படி நெட்டிசன்கள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆதலால், கப் வேணுமா கல்யாணம் பண்ணிக்கோ பிகிலு என்பது தான் இன்றைய Trending.
மேலும் படிக்க | இமாலய ரன்கள் முதல் அதிக கேட்ச்கள் வரை... உலகக் கோப்பையில் ஜொலித்த வீரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ