டி 10 லீக் 2021 (T10 League2021) போட்டிகளில் நிக்கோலஸ் பூரன் புதிய சாதனையை படைத்திருக்கிறார். 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பூரன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நார்தன் வாரியர்ஸ் (Northern Warriors) மற்றும் பங்களா டைகர்ஸ் (Bangla Tigers) அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆட்டத்தில், நிக்கோலஸ் பூரனின் அபாரமான நார்தன்  வாரியர்ஸ் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. 


ஒரு T10 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பதிவு செய்யப்பட்டது என்பதும் ஒரு சாதனை தான். இதற்கான பாராட்டும் நிக்கோலஸ் பூரனுக்கே உரித்தானது.



ஐபிஎல்  14 வது சீசனுக்கு முன்னதாக, அபுதாபியில் (Abu Dhabi) நடைபெற்று வரும் T10 லீக்கில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த நிக்கோலஸ் பூரன் என்ற அபார சாதனையாளரை அந்த அணி, எதிர்வரும் IPL சீசனுக்காக தக்க வைத்துக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.  


நார்தன் வாரியர்ஸ் அணிக்காக விளையாடும் புரான், 26 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார், பங்களா டைகர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது நார்தன் வாரியர்ஸ் அணி. இந்த இன்னிங்ஸின் போது புரான் 12 சிக்ஸர் மற்றும் மூன்று பவுண்டரிகளை அடித்தார்.


Also Read | விதிமுறைகளை மீறி பயணித்த Ronaldo, இத்தாலிக்கு அபராதம் கட்டுவாரா?


இதன் மூலம் டி 10 லீக்கில் அதிக சிக்ஸர்களை அடித்த சாதனையை புரான் பதிவு செய்திருக்கிறார். மற்றுமொரு சாதனையாக, ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக ஆறு சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டது.


டாஸ் வென்ற, பங்களா டைகர்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. நார்தன் வாரியர்ஸ் அணியின் இன்னிங்ஸைத் தொடங்க வந்த லென்ட்ல் சிம்மன்ஸ் (Lendl Simmons) மற்றும் வாசிம் முஹமது (Wasim Muhammad) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 22 ரன்கள் சேர்த்தனர். 


இரண்டாவது ஓவரில், நார்தன் வாரியர்ஸ் அணியின் வாசிம் முஹமது (Wasim Muhammad) அவுட்டானார். முதல் விக்கெட் வீழ்ந்த பிறகு, சிம்மன்ஸ் புரானுடன் இணைந்த நிக்கோலஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தனர்.  


 Also Read | IPL 2021 இந்தியாவில் நடைபெறுமா? ரஞ்சி டிராபி நடைபெறாதா?


சிம்மன்ஸ் 22 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களின் உதவியுடன் 41 ரன்கள் எடுத்தார். புரான் மற்றும் சிம்மன்ஸ் ஆகியோரின் கூட்டணி, வாரியர்ஸ் அணி 10 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் என்ற சூப்பர் ஸ்கோரை எடுக்க உதவியது.


163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய பங்களா டைகர்ஸ் அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே நார்தன் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைகர்ஸ் அணியின் கேப்டன் ஆண்ட்ரே பிளெட்சர் (Andre Fletcher) 53 ரன்கள் எடுத்தார். சிராக் சூரி (Chirag Suri) ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார்.


Also Read | Australian Open: தனிமைப்படுத்தல் முடிந்த நிலையில், சூடு பிடிக்கும் டென்னிஸ் களம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR