IPL 2021 இந்தியாவில் நடைபெறுமா? ரஞ்சி டிராபி நடைபெறாதா?

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனை இருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போட இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பி.சி.சி.ஐ (BCCI) பொருளாளர் துமால் தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 31, 2021, 02:44 PM IST
  • IPL 2021 இந்தியாவில் நடைபெறும்
  • இந்த ஆண்டு ரஞ்சி டிராபி நடைபெறாது
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவதால் ஐபிஎல் 2021 இந்தியாவில் நடைபெறும்
IPL 2021 இந்தியாவில் நடைபெறுமா? ரஞ்சி டிராபி நடைபெறாதா? title=

புதுடெல்லி: இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் பிரச்சனை இருக்குமா என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஐ.பி.எல் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போட இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பி.சி.சி.ஐ (BCCI) பொருளாளர் துமால் தெரிவித்தார்.

கூட்டத்தை ஓரளவுக்கு அரங்கங்களுக்கு அழைத்துச் செல்வது குறித்தும், இந்த பருவத்தில் ரஞ்சி டிராபி போட்டிகளை நடத்த வேண்டாம் என்று பி.சி.சி.ஐ. கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் COVID-19 பாதிப்பு கணிசமாக குறைந்த நிலையில், உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், பி.சி.சி.ஐ (Board of Control for Cricket in India – BCCI) இந்த ஆண்டு போட்டிகளை இந்தியாவிலேயே நடத்தலாம். எனவே, வெளிநாட்டில் அதற்கான இடத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் தகவல்களை இந்தியன் பிரீமியர் லீக்கின் பொருளாளர் அருண் சிங் துமல் தெரிவித்தார்.

Also Read | விதிமுறைகளை மீறி பயணித்த Ronaldo, இத்தாலிக்கு அபராதம் கட்டுவாரா?

ஐபிஎல் நிர்வாகக் குழுவில் உள்ள துமல், கடந்த ஆண்டைப் போலல்லாமல், டி 20 லீக் (T20 league) 2021 போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த முடியும் என்று BCCI நம்புவதாக அருண் சிங் துமல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) நடைபெற்றது.

அதேபோல், ஐ.பி.எல் போட்டியைக் காண்பதற்காக, ஓரளவு கூட்டத்தை மைதானத்திற்கு அனுமதிக்கலாம்; இந்த பருவத்தில் ரஞ்சி டிராபி நடத்த வேண்டாம் என்ற விஷயங்களை பி.சி.சி.ஐ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியினர் பெற்ற அபார வெற்றி, ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் மகள்லிர் கிரிக்கெட் அணியினருக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடுவது குறித்தும் அவர் பேசினார்.

"இந்தியாவில் ஐபிஎல் போட்டியை நடத்துவது தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம், அது சாத்தியமானது என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, வெளிநாட்டில் போட்டிகளை நடத்தலாமா என்றுகூட நாங்கள் யோசிக்கவில்லை, இந்தியாவிலேயே ஐ.பி.எல் போட்டிகள் நடத்தப்படும்".  

Also Read | Kieron Pollard நல்லாதான் இருக்காரு: Viral ஆன ‘Kieron Pollard Death’ செய்தி, வெறியான fans

தற்போது இந்தியாவின் கோவிட் நிலைமை ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட பாதுகாப்பாக உள்ளது. நிலைமை தொடர்ந்து முன்னேறி வருகிறது, எனவே இந்தியாவிலேயே ஐ.பி.எல் போட்டிகளை நடத்தலாம் என்று நம்புகிறோம்,” என்றார் துமல்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு சராசரியாக 3743 ஆக உயர்ந்துள்ளது, இது அங்கு செப்டம்பர் 19ஆம் தேதியன்று ஐபிஎல் 2020 தொடங்கியபோது  நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு சராசரியாக 770 என்ற நிலையில் இருந்தது. ஆனால் மக்கள்தொகையில் மிகப் பெரிய இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 90000 வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தது, ஆனால் இப்போது அது 15000 க்கு கீழே குறைந்துவிட்டது.

இந்த ஆண்டு ரஞ்சி டிராபி இல்லை என்பது தொடர்பான கடுமையான முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. அதற்கு பதிலாக, U-19 ஒருநாள் நிகழ்வு மற்றும் பெண்களின் கிரிக்கெட்டுடன் விஜய் ஹசாரே டிராபியை (Vijay Hazare Trophy) நடத்த முடிவு செய்தது.

ஒரு போட்டியை நடத்துவதற்கு பதிலாக, வெவ்வேறு பிரிவுகளில் நிகழ்வுகளை நடத்தலாம் என நினைத்தோம்," என்று துமால் கூறினார், இந்த பருவத்தில் ரஞ்சி டிராபி நடைபெறாததால்,  வீரர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்படும்.

ALSO READ: Pakistan கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்யும் ICC

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News