மார்ச் 23 ஆம் தேதியில் இருந்து ஐபிஎல் 2019 தொடர்ர் தொடங்குகிறது. இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அனைத்து வீரர்களும் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளில் வெவ்வேறு லீக்கில் விளையாடுகின்றனர். இந்த நேரத்தில் அனைத்து அணிகளுக்கும் முன் ஒரு பிரச்சினை உள்ளது. அதாவது ஐபிஎல் முடிவடைந்தவுடன், இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாடு வீரர்கள் என அனைத்து வீரர்களும் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும். இந்தவேளையில் அனைத்து அணி நிர்வாகம் எங்கள் வீரர்களுக்கு காயம், ஃபிட்னஸ் போன்ற எந்தவித பிரச்சனையும் ஏற்ப்படக்கூடாது என்ற கவலையில் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகக் கோப்பை மே 30 ஆம் நாள் தொடங்கப்பட உள்ளது. இதில் பார்க்கவேண்டியது என்னவென்றால், ஐபிஎல் தொடர் முடிந்ததும் உலகக் கோப்பை தொடரில் வீரர்கள் பங்கேற்க்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு கிடைக்கும் என்பதைப் பார்க்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது.


தற்போது கிடைத்த தகவலின்படி, உலகக் கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இந்தியாவின் வேகமான பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு, இந்த ஐ.பி.எல். தொடரின் இரண்டாது பாதியில் ஓய்வு அளிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஐ.பி.எல். தொடரின் முதல்பாதி போட்டிகள் முடிந்தவுடன் தான், யாருக்கு? எந்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


அப்படி ஒருவேளை புவனேஷ்வர் குமாருக்கு ஒய்வு அளிக்கப்பட்டால் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.