வரும் பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்பார்கள் என வடகொரியா தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் வடகொரியா வீரர்களுடன் அவர்கள் நாட்டைச் சேர்ந்த குழுவும் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்கொரியா மற்றும் வடகொரியா-விற்கு இடையே போர் பதற்றம் நிலவி வரும்சூழலில்  தென்கொரியாவில் நடைபெறும் இந்த குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க வடகொரியா பங்கேற்கவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சியோலில் தென் கொரியா - வடகொரியா பிரதிநிதிகள் பங்கேற்க, நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் தென்கொரிய அமைச்சர் சோ மியோங்-கியோன், வடகொரியாவின் பிரதிநிதிகள் குழு தரப்பில் ரி சன் க்வான் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் குளிர்கால ஒலிம்பிக், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் இதர பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.