கோவிட் பாசிட்டிவ் சோதனையில் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டால், உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 5 ஆண்டு சிறைதண்டனையை சந்திக்க நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சுக்குக் புத்தாண்டின் தொடக்கமே சர்ச்சைகளுடன் தொடங்கியிருக்கிறது. 34 வயதான நோவக் ஜோகோவிச்  கோவிட் தடுப்பூசி (Corona Vaccine) விலக்கு தொடர்பாக சர்ச்சைகளில் சில நாட்களாக சிக்கியிருக்கிறார்.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இந்த மாதம் 17ம் (2022, ஜனவரி 17) தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவும், ஆஸ்திரேலிய அரசும் அறிவுறுத்தியிருந்தன.


ஆனால், போட்டியில் கலந்துக் கொள்ள வந்த ஜோகோவிச்சிடம், மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் இல்லை. அவரது விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார். 


ALSO READ | போன மாசம் கொரோனா! இந்த மாசம் விசா தடை! நோவக் ஜோகோவிச்


அவரது விசாத் தடை, ஆஸ்திரேலியன் ஓபன் பட்டப் போட்டிகளில் கலந்துக் கொள்ள தடையாக இருக்குமோ என்ற அச்சம் புத்தாண்டில் அவருக்கு ஏற்பட்டுள்ளது. 


இதுதொடர்பான வழக்கீல் திங்கட்கிழமை (ஜனவரி 10), ஆஸ்திரேலிய அரசின் விசா ரத்து முடிவை ரத்து செய்து ஜோகோவிச்சை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டதால், ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு எதிரான நீதிமன்ற வழக்கில் ஜோகோவிச் (Novak Djokovic) வெற்றி பெற்றார். 


டென்னிஸ் நட்சத்திரம் ஜோகோவிச்சிற்கு, 2021 டிசம்பரில் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக, அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எனவே, நம்பர் 1 தரவரிசையில் உள்ள வீரர், தடுப்பூசி பெறத் தகுதியற்றவர் என்பதால் அவருக்கு ஆறு மாதங்கள் வரை 'மருத்துவ விலக்கு' அளிக்கப்பட்டது. 



அரசின் பிரிவு 248-ன்படி - 'தொற்றுநோயின் போது சுகாதார விதிமுறைகளின்படி செயல்படத் தவறினால்' - விதிகளை கடைபிடிக்காதவர்கள், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும். 


உண்மையில் ஜோகோவிச்சுக்கு கோவிட் ஏற்பட்டிருந்தால், அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் வேறு எங்கும் பயணம் செய்திருக்கக்கூடாது. அவரது பயண விவரங்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை விசாரித்து வருகிறது.


சமீபத்தில், ஜனவரி 4 அன்று ஸ்பெயினில் இருந்து பயணம் செய்வதற்கு முன்னதாக, கிறிஸ்துமஸ் தினத்தன்று ஜோகோவிச் பெல்கிரேடில் இருந்ததாக சமூக ஊடகப் பதிவுகள் அம்பலப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 


தற்போது, ஜோகோவிச், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் மற்றுமொரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,  தனது பயணப் படிவத்தை நிரப்புவதில் தவறு செய்தது தனது விமான பயணங்களை பதிவு செய்த முகவர் தான் என்று கூறுகிறார்.  


ALSO READ | T20-க்கு 2 புது ரூல்ஸ் கொண்டு வந்த ஐசிசி


ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு எனது முந்தைய பயணத்தைப் பற்றிய தவறான பெட்டியை டிக் செய்ததில் நிர்வாக தவறுக்கு எனது முகவர் மன்னிப்பு கேட்கிறார்," என்று ஜோகோவிச் கூறினார்.



எனவே, விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரின் கண்களும் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் மீது குவிந்துள்ளன. அவர் ஜோகோவிச்சின் விசாவை ரத்துசெய்து அவரை நாடுகடத்த உத்தரவிடலாம், ஜோகோவிச்சுக்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதிக்கலாம். 


ஆஸ்திரேலிய அரசின் முடிவு என்ன? என்ன நடக்கும் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


ஜோகோவிச் தொடர்பான முடிவை வியாழக்கிழமை (ஜனவரி 13) இன்று அரசு அறிவிக்கும் முடிவு எடுக்கப்படும் எஎன்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆஸ்திரேலிய ஓபன் 2022 பதிப்பு ஜனவரி 17 அன்று தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Ashes Viral: ஸ்டம்பை ’இரும்பில்’ செஞ்சிருப்பாங்களோ?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR