புதுடெல்லி: பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சிற்கும் ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது.
ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அவர் விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது ஜோகோவிச்சை தடை செய்ய ஆஸ்திரேலிய அரசாங்கம் தயாராகி வருகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இந்த மாதம் 17ம் (2022, ஜனவரி 17) தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் அறிவுறுத்தியிருந்தனர்.
ஆனால், போட்டியில் கலந்துக் கொள்ள வந்த ஜோகோவிச்சிடம், மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் இல்லை. அவரது விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், எனவே அவர் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.
9 முறை ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்ற நோவாக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், விசா ரத்து செய்யப்பட்டிருப்பதால், அவர் இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துக் கொள்ள முடியுமா என்ற கேள்விகள் எழுகின்றன.
ALSO READ | T20-க்கு 2 புது ரூல்ஸ் கொண்டு வந்த ஐசிசி
இந்த நிலையில், டென்னிஸ் நட்சத்திரத்திற்கு மேலும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தடையை தவிர்க்க, நோவக் ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
முன்னதாக, டென்னிஸ் நட்சத்திரம் நோவா ஜோகோவிச், தனக்கு கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக் கொள்ளாமல் இருப்பதற்கான மருத்துவ விலக்கு கிடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் அவர் கோவிட் தடுப்பூசியை போட்டுக்கொள்ளவில்லை.
ஆனால், ஆஸ்திரேலிய அரசோ, போட்டி ஏற்பாட்டாளர்களோ இந்த மருத்துவ விலக்கை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், விக்டோரியா மாநில அரசு மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் அமைப்பாளர்கள் (Organisers of the Event) ஏற்றுக்கொள்ளும் இரண்டு சுயாதீன மருத்துவக் குழுக்களுக்கு ஜோகோவிச் சமர்ப்பித்த தகவல்களின் அடிப்படையில் அவருக்கு மருத்துவ விலக்கு அளிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் மருத்துவ விலக்கை ஆஸ்திரேலியா பரிசீலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், ஜோகோவிச் பெற்ற மருத்துவ விலக்கு சட்டவிரோதமானது என்று விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஒருங்கிணைப்பாளர் குழுவின் சிறப்புப் பிரிவுதான், மருத்துவ விலக்கை பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையில் ஜோகோவிச் தற்போது தனக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி வேண்டும் என்று கோரி விண்ணப்பித்துள்ளார்.
நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாத சூழ்நிலை வந்து விடுமோ என்ற அச்சங்களுக்கு மத்தியில், "சட்டம் அனைவருக்கும் சமமானதே. சட்டத்திற்கு எந்தவித பேதமும் இல்லை, பாதுகாப்பில் சமரசம் செய்துக் கொள்ளமுடியாது" என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நோவக் ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள், கடந்த மாதம் ஜோகோவிச்சுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டதாகவும், அதனால்தான் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஜோகோவிச் தற்போது மெல்போர்னில் குடிவரவு அதிகாரிகளின் காவலில் உள்ளார். நாளை அதாவது ஜனவரி 10ம் தேதியன்று ஃபெடரல் சர்க்யூட் நீதிமன்றத்தில், தனக்கு ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி மறுக்கும் முடிவை எதிர்த்து சவால் செய்யவிருக்கிறார்.
ALSO READ | 2014க்கு பிறகு கோலி இல்லாமல் முதல் முறை தோற்ற இந்திய அணி!
இருப்பினும், ஜோகோவிச்சின் விசா ரத்து முடிவை, அந்நாட்டு அரசு திரும்பப் பெறத் தவறினால், அவர் ஆஸ்திரேலிய ஓபன் போட்டித்தொடரில் கலந்துக் கொள்ளமுடியாது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை பத்தாவது முறை வென்றவர் என்ற சாதனை, ஜோகோவிச்சுக்கு எட்டாக்கனியாகிவிடலாம்.
ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நடைபெறும் சட்டப் போராட்டத்தில் ஜோகோவிச் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? விசா ரத்து செய்யப்பட்ட நபரை மூன்று ஆண்டுகளுக்கு நாடு கடத்தலாம், தற்காலிக விசா வழங்குவதும் சாத்தியமில்லாமல் போகலாம். ஜோகோவிச்சிற்கு மூன்று ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படலாம்.
புதிய விசா விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, நாடு கடத்தப்படும் நேரம் மற்றும் சில சூழ்நிலைகளில் தடை நீக்கப்படலாம் ஆனால் ஒவ்வொரு வழக்கும் அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் பார்க்கப்படும் என்று ஆஸ்திரேலிய குடிவரவுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் அமைப்பாளர்கள் பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், தடுப்பூசி தொடர்பாக வீரர்கள் யாரும் தவறான தகவல்களைத் தெரிவிக்கவில்லை என்று ஆஸ்திரேலிய ஊடகங்களிடம் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ | Ashes Viral: ஸ்டம்பை ’இரும்பில்’ செஞ்சிருப்பாங்களோ?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR