145 ஆண்டுகளில் முதல்முறை! டெஸ்ட் கிரிக்கெட்டில் சரித்திரத்தை மாற்றி எழுதும் ஹாரி புரூக்!

New Zealand v England: நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் மற்றொரு சதம் அடித்து வரலாறு படைத்தார்.
New Zealand v England: ஹாரி புரூக் கடந்த ஆண்டில் இங்கிலாந்துக்காக திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தினார் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில் ஒரு அற்புதமான சதத்துடன் அனைவரையும் கவர்ந்தார். 13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணியால் வாங்கப்பட்ட புரூக், இந்த டெஸ்ட் போட்டியில் 169 பந்துகளில் 184 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த இன்னிங்ஸ் மூலம் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 800 ரன்கள் எடுத்த வரலாற்றில் முதல் பேட்ஸ்மேன் ஆனார். முன்னதாக, 9 டெஸ்ட் இன்னிங்ஸ்களுக்குப் பிறகு அதிக ரன்கள் எடுத்த சாதனையை இந்தியாவின் வினோத் காம்ப்லி (798) வைத்து இருந்தார், ஆனால் ஹாரி புரூக் வெள்ளிக்கிழமை தனது எண்ணிக்கையை 807 ஆக உயர்த்தினார். ஹெர்பர்ட் சட்க்ளிஃப் (9 இன்னிங்ஸ்களில் 780 ரன்கள்), சுனில் கவாஸ்கர் (9 இன்னிங்ஸில் 778 ரன்கள்) மற்றும் எவர்டன் வீக்ஸ் (9 இன்னிங்ஸில் 777 ரன்கள்) போன்ற ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க | TNPL Auction: ஏலத்தில் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்கள் - முழு விவரம்
2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஏழு ஓவர்களில் 21-3 என்ற நிலையில் இங்கிலாந்து தள்ளாடியது. இங்கிலாந்தின் டாப் ஆர்டரான சாக் க்ராலி (2), பென் டக்கெட் (9), ஒல்லி போப் (10) ஆகியோரை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் விரைவாக வெளியேற்றியதால் இக்கட்டான நிலையில் இருந்தது. மாட் ஹென்றி மற்றும் கேப்டன் டிம் சவுத்தி ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். இந்த டெஸ்டில் சவுதி அனைத்து வடிவங்களிலும் 700வது சர்வதேச விக்கெட்டைப் பெற்று, மைல்கல்லை எட்டிய முதல் நியூசிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் மற்றும் ரூட் அணியை சரிவில் இருந்து மீட்டனர். முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு ப்ரூக்கின் அரை சதம் பெரிதும் உதவியது. அதே பார்மில் 2வது டெஸ்டிலும் விளையாடினார். 24 பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களுடன் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 176 பந்துகளில் 186 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ரூட் சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 224 பந்துகளில் 153 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து அணி 435க்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் டிக்லர் செய்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
மேலும் படிக்க | TNPL Auction: இந்த தமிழக வீரருக்கு அடித்தது ஜாக்-பாட்... ஐபிஎல்லை விட அதிக தொகை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ