இந்தியாவின் மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் பிறந்த ஒரு இளைஞன் கிரிக்கெட்டில் மேதையாக வளம் வருவான் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த இளைஞன் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கு என்று ஒரு இடத்தை ஏற்ப்படுத்தி உள்ளான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1989-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. நவம்பர் 15-ம் தேதி தொடங்கிய முதல் போட்டி கராச்சியில் நடைபெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 409 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 41 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.


அப்போது தான் முதல் முறையாக சச்சின் என்ற இளைஞன், இந்திய அணிக்காக விளையாட களமிறங்குகினார். முதல் போட்டியில் 24 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு காலகட்டத்தில் இவர் இல்லையென்றால் அந்த போட்டியை ரசிகர்கள் காணமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடினார். பல சாதனைகளை செய்துள்ளார். ஆனால் ஒருமுறைக்கூட தன் சாதனைகளை குறித்து தலைகணத்துடன் பேசியதில்லை.


தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கோ அல்லது இனிமே ஆட வரும் கிரிக்கெட் வீரர்களுக்கோ "சச்சின் டெண்டுல்கர்" எப்பொழுதும் ரோல்மாடலாக இருப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


இந்திய அணிக்காக முதன் முதலாக தான் ஆடிய இந்த நாளை குறித்து "சச்சின் டெண்டுல்கர்" கருத்து தெரிவித்துள்ளார்.


இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. 24 ஆண்டுகளாக இது நாட்டிற்காக விளையாடியதை ஒரு கௌரவமாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.