வங்களாதேசம் அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டும் இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 99(116) ரன்னும், முகம்மது மிதுன் 60(84) ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஜுனைத் கான் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாகிஸ்தான் வெற்றி பெற 240 ரன்கள் தேவை. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி, இறுதிபோட்டியில் இந்தியாவுடன் மோதும்.


 




இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. முதல் ஐந்து ஓவரில் 12 ரன்களுக்கு மூன்று விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது வங்களாதேசம். 



 



14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


ஆசிய கண்டத்தில் உள்ள அணிகள் மட்டும் பங்கேற்ற, இந்த தொடரில் அந்த வகையில், இந்திய அணி ஏற்கனவே இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளது. இன்று பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ் அணிகள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அந்த அணி இறுதி போட்டியில், இந்தியாவுடன் மோதும்.


 



ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.


இந்த ஆண்டு நடைபெற்று ஆசியா தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் என மொத்தம் ஆறு அணிகள் மோதின. இந்த அணிகள் "ஏ" மற்றும் "பி" என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். 


"ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் மோதின. இதில் ஹாங்காங் அணி வெளியேறியது. "பி" பிரிவில் இலங்கை, வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மோதின. இதில் இலங்கை அணி வெளியேறியது. 


வெற்றி பெற்ற இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நான்கு அணிகள் "சூப்பர் 4 சுற்று"க்கு முன்னேறின. இதில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ் எதிராக வெற்றியும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டிராவும் செய்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியது.