Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் வீரர் சர்ச்சை கருத்து
Virat Kohli Vs Sohail Khan: விராட் கோலி குறித்து பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது.
கிரிக்கெட் களத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே ஒரு பயம் தொற்றிக்கொள்ளும். இருநாட்டு ரசிகர்களும் ஆக்ரோஷமாக இருப்பார்கள் என்பது இது புதிதல்ல. இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போதெல்லாம், மைதானத்தில் வீரர்கள் சண்டையிடுவது வழக்கம். அவ்வப்போது இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சில கருத்துக்களை கூறி சர்ச்சையாக்குவது உண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் கான் விராட் கோலி குறித்து பகிர்ந்த ஒரு சம்பவம், அவரது ரசிகர்கள் விரும்பாத சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. பலர் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
இதெல்லாம் சகஜம் பா
தனது கிரிக்கெட் பயணத்தில் விராட் கோலியின் பேட் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் மேட்ச் என்றாலே, இன்னைக்கு விராட் கோலி சதம் அடிப்பார் என ரசிகர்கள் கணிப்பது உண்டு. அந்த அளவுக்கு பாகிஸ்தான் பவுலர்களை விரட்டுவார். இதன் காரணமாக மைதானத்தில் விராட் கோஹ்லிக்கும், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்படுவது உண்டு. பழைய வீரர்கள் முகமது அமீர், ஜுனைத் கான் தொடங்கி தற்போது ஷாஹீன் ஷா அப்ரிடி வரை என பாகிஸ்தான் பவுலர்களுடன் ஏற்படும் மோதல் தலைப்புச் செய்தியாவது வழக்கம்.
மேலும் படிக்க: எதிர்காலமே இவர்தான்... சாதனை மன்னனுக்கு விராட் கோலி சூடிய மகுடம்
2015 உலகக் கோப்பையில் நடந்த சம்பவம்
பாகிஸ்தான் பந்து வீச்சாளர் விராட் கோலியுடனான ஸ்லெட்ஜிங் செய்த சம்பவத்தை கூறியுள்ளார். அதாவது பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சோஹைல் கான் பகிர்ந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சோஹைல் கானின் சர்ச்சைக்குரிய கதை 2015 உலகக் கோப்பையில் நடந்துள்ளது. சோஹைலும் விராட் கோலியும் முதல் மற்றும் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டது இந்த போட்டியில் தான். இதில் விராட் கோலி அபாரமாக சதம் அடித்தார். அப்பொழுது விராட் கோலியை சொஹைல் கான் சீண்டியுள்ளார்.
கோலியை ஒரு சிறந்த பேட்டர்-அற்புதமானவர்
2015 உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிக்கொண்ட ஆட்டத்தில் இருநாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக இருந்தனர். அந்த போட்டியில் கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதல் குறித்து சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
சோஹைல் கான் கூறுகையில், "பேட்டிங் செய்ய மைதானத்துக்கு வந்த கோலியை நான் சீண்டினேன். அதன்பிறகு நான் பேட்டிங் செய்ய மைதானத்துக்கு வந்தபோது, என்னிடம் விராட் வந்து, நீ கிரிக்கெட்டுக்கு புதிதாக வந்திருக்கிறாய், இவ்வளவு பேசுகிறாய் என்றார். அப்போது நான் டெஸ்ட் போட்டியிலும் விளையாடிக்கொண்டு இருந்தேன். கோலியை பார்த்து, மகனே, நீங்கள் இந்தியாவுக்காக அண்டர்-19 விளையாடும்போது, உங்கள் தந்தை [தன்னைக் குறிப்பிட்டு] ஒரு டெஸ்ட் வீரர் எனக் கூறினேன்" என அந்த போட்டியில் ஏற்பட்ட மோதலைக் குறித்து பேசினார். அதுமட்டுமில்லாமல் உலகின் தலைசிறந்த பேட்டர்களில் ஒருவராக இருக்கும் கோலியை மதிக்கிறேன், ஏனென்றால் அவர் ஒரு சிறந்த பேட்டர் அற்புதமானவர் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!
களத்திற்கு வெளியே நண்பர்கள்
இந்தியா-பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே இதுபோன்ற விஷயங்கள் வெளிவருவது இது முதல் முறையல்ல. கெளதம் கம்பீர் மற்றும் ஷாஹித் அப்ரிடி இடையேயான ஸ்லெட்ஜிங் பல தலைப்புச் செய்திகளை உருவாக்கியது. ஆனால் களத்தில் வீரர்களிடையே ஆக்ரோசம் இருந்தாலும், அவர்கள் களத்திற்கு வெளியேயும் நல்ல நண்பர்கள்.
சோஹைல் கானின் கிரிக்கெட் பயணம்
சோஹைல் பாகிஸ்தானுக்காக 9 டெஸ்ட், 13 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி 51 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் அவர் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், 38 வயதான அவர் கடைசியாக பாகிஸ்தானுக்காக கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு 2017 செப்டம்பரில் விளையாடினார்.
மேலும் படிக்க: இந்தியாவுக்கு உலக்கோப்பையை பெற்று தந்த முக்கிய வீரர் ஓய்வு.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ