Joginder Sharma Retirement: இந்தியாவுக்கு உலக்கோப்பையை பெற்று தந்த முக்கிய வீரர் ஓய்வு...

Joginder Sharma Retired: இந்தியா 2007இல் டி20 உலகக்கோப்பையை வெல்ல முக்கிய பங்களிப்பை அளித்த ஜோகிந்தர் சர்மா, இன்று தனது ஓய்வை அறிவித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2023, 03:52 PM IST
  • ஜோகிந்தர் தற்போது DSP ஆக காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
  • ஜோகிந்தர் சர்மா மொத்தம் 8 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.
  • ஜோகிந்தர் சிஎஸ்கே அணிக்காக விளையாடி உள்ளார்.
Joginder Sharma Retirement: இந்தியாவுக்கு உலக்கோப்பையை பெற்று தந்த முக்கிய வீரர் ஓய்வு...

Joginder Sharma Retired​: இப்போது வரை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பாராட்டுவதற்கு முதன்மையான காரணம், 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை தொடர்தான். அப்போது, சச்சின், கங்குலி, டிராவிட் இல்லாத இளம் வீரர்கள் அடங்கிய அணியை வைத்துக்கொண்டு பலமிக்க ஆஸ்திரேலியா போன்ற அணிகளையும், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி அந்த உலகக்கோப்பையை இந்தியாவுக்கு தூக்கிவந்தது. 

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி மிகவும் சுவாரஸ்யமானது. அந்த போட்டி வரலாற்றில் என்றும் அழியாத தடத்தை படைத்ததற்கு காரணம், கடைசி ஓவரில் தோனி எடுத்த ஒரு ரிஸ்க்தான். அந்த ரிஸ்க் ஒருபுறம் இருக்க, அந்த ரிஸ்க்கை ஒரு வீரரை நம்பியே எடுத்தார். ஆம், அந்த வீரர்தான் ஜோகிந்தர் சர்மா. தற்போது, அவர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

மறக்க முடியாத ஓவர்

அவரின் இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் நாஸ்டால்ஜியாவை கிளறிவிட்டுள்ளது. பரபரப்பான அந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இறுதி ஓவரில் யாரை தோனி பயன்படுத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டிருந்தது. ஆர்பி சிங், ஸ்ரீசாந்த், இர்ஃபான் பதான் என தனது ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர்களை அவர் பயன்படுத்திவிட்டார். யூசப் பதானுக்கு ஓவரை கொடுக்க முடியாது. இதில்  ஹர்பஜனுக்கும், ஜோகிந்தருக்கும்தான் வாய்ப்பிருந்தது. அனைவரும் ஹர்பஜன்தான் வீசுவார் என்று கணிக்க, ஜோகிந்தரின் பந்தை கொடுத்து கோப்பையை அலேக்காக தூக்கினார் தோனி

மேலும் படிக்க | IND vs NZ: கோப்பையை பெற்றதும் ஹர்திக் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த பிரித்வி ஷா!

மிஸ்பா, ஜோகிந்தர் பந்தில் மட்டும் சில ஷாட்களை விளையாடுவதை முன்பு கவனித்த தோனி, அதையே பொறியாக வைத்துதான் அந்த அசாத்திய நிகழ்வை நிகழ்த்திக்காட்டியிருந்தார். ஒருவேளை, அன்று மிஸ்பா உஷாராகி நல்ல ஷாட்களை ஆடி போட்டியை வென்றிருந்தாலும் தோனி அடுத்தடுத்து மீண்டெழுந்திருப்பார் என்றாலும், இந்த போட்டியை தவறவிட்டிருந்தால் அது தாமதாகியிருக்கும். ஆனால், ஜோகிந்தருக்கு அதுதான் வாழ்வாகவே அமைந்தது. 

சிஎஸ்கே வீரர்

அந்த ஓவர் அவரின் வாழ்க்கையே மாற்றிவிட்டது என்றாலும், அவர் சர்வேதச அளவில் குறைவாகவே இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். 2004இல் ஒருநாள் அரங்கில் அறிமுகமான ஜோகிந்தர், 4 போட்டிகளில் விளையாடி 1 விக்கெட்டை மட்டும் வீழ்த்தியிருந்தார். அதேபோன்று 4 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் விளையாடி 4 விக்கெட்டுகளை அவர் எடுத்துள்ளார். இதுதான் அவரின் சர்வதேச அரங்கில் விளையாடி போட்டிகள். இருப்பினும், இவர் வரலாற்றில் மறக்க முடியாத பெயராக நிலைத்துவிட்டார். குறிப்பாக, அந்த 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிதான் அவரின் கடைசி சர்வதேச போட்டி. வரலாறு படைத்த அன்றோடு சர்வதேச அரங்கில் அவர் தலையெடுக்கவேயில்லை. 

39 வயதான இவர் ஹரியானாவில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். சர்வதேச அளவில் அவருக்கு வாய்ப்புகள் இல்லை என்றாலும், தோனி ஐபிஎல் தொடரில் அவரை சிஎஸ்கே அணிக்கு எடுத்தார். அதிலும், முதல் நான்கு சீசனில் விளையாடி மொத்தம் 16 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

புதிய அத்தியாயம் 

இவர் ஹரியானா அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தார். 77 முதல் தர போட்டிகள், 80 List A போட்டிகள், 43 டி20 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். கடைசியாக அவர் 2017ஆம் ஆண்டு நடைபபெற்ற விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஹரியானாவுக்காக விளையாடினார். 

அந்த வகையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த அவர், அதுகுறித்த அறிக்கையையும் வெளியிட்டுள்ளார். அதில்,"2002-2017 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகளாகும்ய ஏனெனில் அந்த காலகட்டம் என்பது, மிக உயர்ந்த மட்டத்தில் கிரிக்கெட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய பெருமை, எனலாம். உங்கள் அனைவருடனும் விளையாடியது ஒரு நிறைவான பாக்கியம். மேலும் எனது கனவை நனவாக்க உதவிய உங்கள் அனைவருக்கும் நன்றி.

கிரிக்கெட்டின் வணிகம் உள்ளிட்ட அதன் உலகில் நான் தொடர்ந்து ஆழமாக பயணிப்பேன் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், புதிய மற்றும் வித்தியாசமான சூழலில் நான் விரும்பும் மற்றும் சவாலான விளையாட்டில் தொடர்ந்து பங்கேற்பேன், நான் நம்புகிறேன். இது ஒரு கிரிக்கெட் வீரராக எனது பயணத்தின் அடுத்த படியாகும். மேலும் எனது வாழ்க்கையில் இந்த புதிய அத்தியாயத்தை எதிர்பார்க்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | எதிர்காலமே இவர்தான்... சாதனை மன்னனுக்கு விராட் கோலி சூடிய மகுடம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News