புதுடெல்லி: இன்று கோடீஸ்வரராக இருக்கும் இந்திய  கிரிக்கெட் வீரர் ஒரு காலத்தில் பானி பூரி விற்று குடும்பத்தின் அன்றாட செலவுகளை சமாளித்தவர். இந்த வீரர் யார் என்று தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) தான் அந்த திறமையான கிரிக்கெட்டர். மும்பையில் ஆசாத் மைதானத்திற்கு வெளியே பானி பூரியை விற்று குடும்பத்தை நடத்தினாலும், தனது திறமையாலும், உழைப்பாலும் விளையாட்டு உலகையே திரும்ப பார்க்கச் செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.


இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) பல இளம் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்களின் தலைவிதியையே மாற்றியுள்ளது. எளிமையான குடும்பச் சூழலில் இருந்து வந்தாலும், தங்கள் திறமையால் உலகத்தையே வியக்க வைத்த சூப்பர் வீரர்கள் பலர். அதில் ஒருவர் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பேட்டர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.


எந்தவித பக்கபலமோ, வசதி வாய்ப்புகளோ இல்லாவிட்டாலும், விளையாட்டின் மீதான ஆர்வமும், திறமையையும், கடும் உழைப்பும், விடா முயற்சியுமே அவரை இன்று பிரபல விளையாட்டு வீரராக உலகிற்கு அடையாளம் காட்டியுள்ளது.


Also Read | ஹர்திக் மற்றும் திவாரியின் ஆட்டத்தால் வெற்றி பெற்றது மும்பை அணி!


இன்று கோடீஸ்வரராக உயர்ந்த கோடியில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பையின் ஒரு கோடியில் வசித்தவர். கோடிக்கணக்கான ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், தனது தனித்துவமான திறமையால், அனைவரையும் தலை நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.


19 வயதே ஆகும், ஜெய்ஸ்வால் 2018 ஆம் ஆண்டு தான் கிரிக்கெட் அரங்கிற்குள் நுழைந்தார். அப்போது 17 வயதே ஆன அவர், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார். மும்பையில் ஆசாத் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பானி பூரி மற்றும் பழங்களை விற்று குடும்பத்திற்கு உதவியாக இருந்த அவர், பல நாட்கள் பசித்த வயிறுடன் தூங்கியிருக்கிறார். வயிறு காலியாக இருந்தாலும், மனம் நிறைய நம்பிக்கையும், கண்களில் இருந்த கனவையும் நிறைவேற்றியது அவரிடம் இந்து பேட்டிங் திறமை. 


உத்தரபிரதேசத்தின் பதோஹி கிராமத்தில் பிறந்த ஜெய்ஸ்வால், தனது கிரிக்கெட் கனவை நிறைவேற்ற மும்பைக்கு இடம் பெயர்ந்தார்.


பயிற்சி பெறும்போது, குடிசை மற்றும் கூடாரங்களில் வாழ்ந்த ஜெய்ஸ்வால், வாழ்க்கையில் முதலிடம் பெற வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.


Also Read | டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி


கடும் முயற்சியினால், இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை 2020ல் தனது காலடி தடம் பதித்தார்.  ஆசாத் மைதானத்தில் பயிற்சியாளர் ஜ்வாலா சிங்கின் பார்வை ஜெய்ஸ்வால் மீது படிந்தது தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் வாழ்க்கையை மாற்றும் தருணமாக அமைந்தது.
 
யு -19 உலகக் கோப்பையில் (U-19 World Cup) ஒரு சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் உட்பட 400 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக 'ஆட்ட நாயகனாக' தேர்வு செய்யப்பட்டார். அந்த சிறப்பான ஆட்டம் தான், அவர் ஐபிஎல் 2020 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்க அடிப்படையாக அமைந்தது.


18 வயதேயான ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடிக்கு வாங்கியது. 2020 பதிப்பில் ஜெய்ஸ்வாலுக்கு மூன்று ஆட்டங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆனால் அவரது திறமையை புரிந்துக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்த சீசனுக்கும் அவரைத் தக்கவைத்துக் கொண்டது. 


புதிய கேப்டன் சஞ்சு சாம்சனின் கீழ், ஜெய்ஸ்வால் தனது திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் கிடைத்தன. தனது கம்பீரமான ட்ரோக்ப்ளே மற்றும் அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தார். வேகப்பந்து மற்றும் சுழல் பந்துகளையும் அநாயாசமாக கையாள்வதில் திறமையானவர் 19 வயதேயான ஜெய்ஸ்வால்.


இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களில், ஜெய்ஸ்வால் முதல் பாதியில் ஜோஸ் பட்லர் மற்றும் எவின் லூயிஸ் ஆகியோருடன் இணைந்து 156 ரன்கள் அடித்தார்.


Also Read | IPL 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR