அபுதாபியில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 34-வது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஏழு ஓவர் வித்தியாசத்தில், ஐந்து விக்கெட்டுகள் மீதமிருந்த நிலையில் கேகேஆர் அணி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன்.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச முடிவு செய்தது. மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மட்டை வீச களம் இறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி.
முதலில் மட்டை வீச களம் இறங்கிய மும்பை அணியின் குயின்டன் டி காக் 42 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். அவருடன் தொடாக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் சர்மா 30 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
அதுமட்டுமல்ல, மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ரோஹித் சர்மா வியாழக்கிழமை ஒரு புதிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாதனையை ஏற்படுத்தினார். லீக் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரோஹித் ஷர்மா.
இதற்கிடையில், கீரான் பொல்லார்டும் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி 150-க்கு மேல் ஸ்கோரை அடைய உதவினார். லோகி பெர்குசன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் கொல்கத்தா அணிக்காக தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது 6வது இடத்திற்கு வந்துவிட்டது. கொல்கத்தா அணி 8வது இடத்தில் இருந்து, 4வது இடத்திற்கு முன்னேறிவிட்டது.
அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021இன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்கள்: டி காக், ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், சவுரப் திவாரி, பொல்லார்டு, குருணல் பாண்ட்யா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், பும்ரா, டிரென்ட் பவுல்ட்.
இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் களம் இறங்கிய வீரர்கள்: ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
Also Read | DC vs SRH: ஹைதராபாத் அணியின் பிளேஆஃப் கனவு தகர்ந்தது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR