ரிஷப் பண்டுக்கு மாற்று: சாம்சனும் இல்லை.... கிஷானும் இல்லை - இவர் தான்!
Rishabh Pant Replacement: விபத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்டிற்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சரியாக இருக்க மாட்டார்கள் என கூறி மற்றொரு இளம் வீரர் ஒருவரை ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பரிந்துரைத்துள்ளார்.
Rishabh Pant Replacement: வெள்ளை பந்து வடிவத்தில், இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி தற்போது சுவாரஸ்யமாக உள்ளது. ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பரில் கார் விபத்துக்குள்ளானதால் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை உட்பட மேலும் ஆறு மாதக்காலம் விளையாட கூடாது.
பண்ட் இல்லாததால், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கேஎஸ் பாரத் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார், இஷான் கிஷன் டி20 போட்டிகளிலும், கேஎல் ராகுல் கடந்த சில மாதங்களாக ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் விக்கெட் கீப்பிங் செய்துவருகின்றனர்.
இருப்பினும், டி20 போட்டிகளில் கிஷான் ஃபார்ம் இழந்துள்ளதாலும், ராகுலுக்கு இப்போது தொடை தசையில் காயம் ஏற்பட்டுள்ளதாலும், வரவிருக்கும் இந்திய அணியின் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வு தலைவலி ஏற்கனவே அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | இனி மேல் தோனி கிட்ட அப்படி கேட்காதீங்க.. - ஷேவாக் ஆவேசம்
இந்நிலையில், இந்த குழப்பத்திற்கு முன்னாள் பெங்கால் மற்றும் ஆர்சிபி அணி பேட்டர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஒரு தீர்வை வழங்கியுள்ளார். அதாவது, கடந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் 2023ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியில் ஜிதேஷ் ஷர்மா தனது பார்மை நிரூபித்துள்ளதாகவும், அவர் டி20 மட்டுமில்லாமல் ஒருநாள் தொடருக்கும் கைக்கொடுப்பார் என கோஸ்வாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஃபினிஷராக ஜித்தேஷ் சர்மா செயல்படுகிறார். அவரது எண்ணம் மற்றும் முதல் பந்திலேயே அடிக்கும் திறமைக்காக பாராட்டுகளைப் பெற்ற ஜிதேஷ், மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக நேற்று 27 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிக்காக காயம் அடைந்தபோது ஜிதேஷ் முதல் முறையாக இந்திய அணிக்காக அழைக்கப்பட்டார், ஆனால் அவர் அறிமுகமாகவில்லை.
2008இல் ஆர்சிபி அணியில் வளர்ந்து வரும் வீரராக இருந்த கோஸ்வாமி, கடைசியாக 2020இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். ரிஷப் பண்டிற்கு மாற்றாக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரைப் புறக்கணித்தார், மேலும் ஜிதேஷ் பந்திற்கு சரியான மாற்று என்று கூறினார். இந்திய அணியில் மிடில்-ஆர்டரில் நிலைத்து நின்று ஆடுவதற்கும், பினிஷராக செயல்படவும் நல்ல தேர்வாக ஜித்தேஷ் இருப்பார் என கூறினார்..
"ஜித்தேஷை கூடிய விரைவில் அணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். உலகக்கோப்பை வரை கே.எல்.ராகுல் குணமடையவில்லை என்றால், ஜித்தேஷ் சர்மாவை களமிறக்குங்கள்" என கோஸ்வாமி கூறினார்.
25 (7), 21 (10), 24 (10) மற்றும் 49* (27) என இத்தொடரில் 165 ரன்களில் அடித்ததால், ஜிதேஷ் நிச்சயமாக தனது பெயரை தேர்வுக்குழு கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். கிஷன் மற்றும் சாம்சன் போன்றவர்கள் ஐபிஎல் 2023இல் பெரிதும் போராடியிருந்தாலும் (தலா இரண்டு நல்ல இன்னிங்ஸ்களைத் தவிர), ராகுல் நீண்ட காலம் வெளியேறினால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ