விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் பி.டி உஷா! முதலில் நான் ஒரு வீராங்கனை பிறகே நிர்வாகி
Brij Bhushan Sharan Singh vs Wrestlers: `எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன`: மல்யுத்த வீரர்களை சந்தித்து ஆதரவு தரும் பி.டி.உஷாவின் விளக்கம்
நியூடெல்லி: மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து சொன்ன கருத்துக்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் விமர்சனங்களை எதிர்கொண்டார், தற்போது, தனது கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக கூறி போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறார்.
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகள்
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று பல நாட்களாக போராட்டம் தொடர்கிறது.
விமர்சனங்களுக்கு பி.டி உஷா விளக்கம்
போராட்டத்தைத் தொடரும் மல்யுத்த வீரர்களை சந்தித்து தனது ஆதரவைத் தந்த பி.டி.உஷா, 'எனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன' என்று விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓஏ) தலைவர் பி.டி. உஷா இன்று (2023 மே 3, புதன்கிழமை) தேசிய தலைநகர் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை சந்தித்து, தனது ஆதரவைத் தெரிவித்தார்.
பி.டி உஷா விமர்சனம்
மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக தன் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் பி.டி உஷா, முதலில் ஒரு தடகள வீராங்கனை என்றும், அதற்கு பிறகே, ஒலிம்பிக் அமைப்பின் நிர்வாகி என்றும் விளக்கமளித்தார்.
மேலும் படிக்க | WFI தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக தொடரும் மல்யுத்த வீரர்கள் போராட்டம்
உள்ளிருப்புப் போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்த்து ஏப்ரல் 23 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிப்பதாக பி.டி உஷா உறுதியளித்தார்.
மல்யுத்த வீரர்கள் தங்கள் பிரச்சினைகளுக்காக ஐஓஏவை அணுகுவதற்குப் பதிலாக, தங்கள் போராட்டத்தை மீண்டும் தொடங்கியதாகவும், அது தொடர்பாக கடுமையான கருத்துக்களைத் தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு பி.டி உஷா விளக்கம் அளித்துள்ளார்.
மல்யுத்த வீரர்கள் 'ஒழுக்கத்தை' காட்டியிருக்க வேண்டும் என்றும், அவர்கள் தெருக்களில் இறங்கி போராடுவதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு ' களங்கம்' ஏற்படுத்தியதாகவும் பி.டி. உஷா கூறியிருந்தார், இதையடுத்து, விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக 'உணர்ச்சியற்ற க்ருத்துக்கள்' கூறியதாக பி.டி. உஷாவை பலரும் விமர்சித்துள்ளனர்.
போராட்ட தளத்தில் மல்யுத்த வீரர்களுடன் சுமார் ஒரு மணி நேரம் செலவிட்ட PT உஷா, ஊடகங்களிடம் பேசவில்லை. தங்களுக்கு உதவி செய்வதாக பி.டி உஷா உறுதியளித்ததாக, டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா தெரிவித்தார்.
"ஆரம்பத்தில் பி.டி உஷா அப்படிச் சொன்னபோது, நாங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தோம், ஆனால் பின்னர் அவர் தனது கருத்துக்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் கூறினார். முதலில், தான் ஒரு தடகள வீராங்கனை என்றும் பின்னர் நிர்வாகி என்றும் அவர் கூறினார்," என்று புனியா கூறியதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களுக்கு 'நீதி' வேண்டும் என்றும், அரசாங்கத்துடனோ வேறு எவரிடத்துடனோ அவர்களுக்கும் 'போராட்டம்' இல்லை என்றும் அவரிடம் தாங்கள் தெரிவித்ததாக பஜ்ரங் புனியா தெரிவித்தார்.
"மல்யுத்தத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் இங்கு அமர்ந்துள்ளோம். இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு (WFI தலைவருக்கு எதிரான) குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று போராட்டத்தின் ஒரு பகுதியாக தீவிரமாக இருக்கும் பஜ்ரங் புனியா கூறினார்.
மத்திய அரசு அல்லது இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பாக பி.டி உஷா ஒரு தீர்வைக் கொண்டு வந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பஜ்ரங் புனியா, “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அவர் எங்களுடன் இருப்பதாக மட்டுமே சொன்னார்” என்றார்.
உஷாவுடனான சந்திப்பு திருப்தியாக இருக்கிறதா என்று கேட்டதற்கு, 'அவர் எங்களுக்கு உறுதியளிக்கிறார் என்றால், அவர் அந்த உறுதியை நிறைவேற்றுவார் என்று நினைக்கிறேன்' என புனியா பதிளைத்தார்.
"...ஆனால், விஷயங்கள் சரியாகி நீதி கிடைக்கும் வரை, இந்த போராட்டம் தொடரும் என்று நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தினோம், அதில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம்," புனியா கூறினார்.
போராட்டம் தொடர்பாக பேசிய ஐஓஏ செயல் தலைவர் கல்யாண் சௌபே, "இந்த மாதிரியான போராட்டம் நாட்டின் நற்பெயருக்கு நல்லதல்ல என்று ஐஓஏ தலைவர் டாக்டர் பி.டி. உஷா கூற விரும்புகிறார். உலக அளவில் இந்தியாவுக்கு நல்ல பெயர் உள்ளது. இந்த எதிர்மறையான விளம்பரம் நாட்டுக்கு நல்லதல்ல" என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, உஷா முன்னாள் தடகள வீராங்கனையாக இருந்தும், மல்யுத்த வீராங்கனையாக இருந்தும் மல்யுத்த வீரர்களின் பார்வையை புரிந்து கொள்ளவில்லை என விமர்சிக்கப்பட்டார்.
மைனர் உட்பட ஏழு பெண் மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியாக இருக்கிறார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்குமாறு போராட்டக்காரர்கள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IPL Fights: ஐபிஎல் வரலாற்றின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள்! இவை மைதானத்தின் களச்சண்டைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ