ஐ.பி.எல் 2022 வீரர்கள் ஏலம் நாளை பெங்களூரில் நடைபெற இருக்கும் நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த வாசிம் ஜாபர், அந்த அணியில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். தலைமை பயிற்சியாளராக அனில்கும்பிளே செயல்பட்டு வருகிறார். ஏலம் நடைபெறுவதற்கு 24 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கும் நேரத்தில் வாசிம் ஜாபரின் அறிவிப்பு, பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  IPL Century: சதத்தை தவறவிட்டு 99 ரன்களில் அவுட்டான ஐபிஎல் கிரிக்கெட்டர்கள்


அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார்? என்ற தகவல் வெளியாகவில்லை. வீரர்களை ஏலத்தில் எடுப்பது தொடர்பாக அணி நிர்வாகத்துடன் மனக்கசப்பு ஏதேனும் ஏற்பட்டதா? இல்லை தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை அவர் எடுத்தாரா? என்பது ரகசியமாக இருக்கிறது. வீரர்கள் ஏலத்துடன் புதிய பேட்டிங் பயிற்சியாளரை தேட வேண்டிய கட்டாயத்துக்கு பஞ்சாப் அணி தள்ளப்பட்டுள்ளது.



பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேமியன் ரைட்டும், பீல்டிங் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸூம் பணியாற்றுக்கின்றனர். வாசிம் ஜாபர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் பாடல் வரிகளை பதிவிட்டு, பஞ்சாப் அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். மேலும் ஐபிஎல் 2022 சிறப்பாக அமைய தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் ஒட்டுமொத்த அணிக்கும் வாழ்த்துகளை கூறியுள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் அந்த அணியில் இருந்து விலகி, தற்போது லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது விலகலும் பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தது.



மேலும் படிக்க | ஐ.பி.எல் உரிமையாளர்களை நாளை சந்திக்கும் பிசிசிஐ..! எதுக்கு தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR