IPL 2019: மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட்: மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பஞ்சாப்...
8 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. IPL தொடரின் 9 ஆவது லீக் ஆட்டம் மொகாலியில் இன்று 4 மணிக்கு தொடங்கியது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வந்தது.
இதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினர். இதனால் மும்பை அணி 5 ஓவரில் 50 ரன்னை தொட்டது. அணியின் எண்ணிக்கை 51 ஆக இருக்கும்போது ரோகித் சர்மா 19 பந்தில் 5 பவுண்டரியுடன் 32 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் வெளியேறினார்.
மறுபுறம் பொறுப்பாக ஆடிய டி காக் அரை சதமடித்தார். அவர் 39 பந்தில் 2 சிக்சர், 6 பவுண்டரியுடன் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய யுவராஜ் சிங், 18 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பொலார்டு 7 ரன்னிலும், குருணால் பாண்டியா 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியில் ஹர்திக் பாண்டியா 19 பந்தில் ஒரு சிக்சர், 3 பவுண்டரியுடன் 31 ரன்னில் அவுட்டானார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்களை எடுத்துள்ளது.
அடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் துவக்க வீரர் ராகுல் மற்றும் அதிரடி வீரர் கெயில் சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். 40 ரன்கள் எடுத்திருந்தபோது, அதிரடி காட்டத் தொடங்கிய கெயில், க்ருநால் பாண்ட்யாவின் பந்து வீச்சில் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால் 21 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். நிதானமாக விளையாடி வந்த கே.எல் ராகுல், இறுதியில் 71 ரன்கள் குவித்து பஞ்சாப்பை வெற்றிக்கு அழைத்து சென்றார். 2 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி, பஞ்சாப் அபார வெற்றி பெற்றது.
மும்பை இந்தியன்ஸ்:-
1. குயின்டான் டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்ய குமார் யாதவ், 4. யுவராஜ் சிங், 5. பொல்லார்டு, 6. குருணால் பாண்டியா, 7. ஹர்திக் பாண்டியா, 8. மெக்கிளேனகன், 9. மார்கண்டே, 10. பும்ரா, 11. மலிங்கா.
கிங்ஸ லெவன் பஞ்சாப்:-
1. லோகேஷ் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. சர்பிராஸ் அகமது. 5. டேவிட் மில்லர், 6. மந்தீப் சிங், 7. அஸ்வின், 8. வில்ஜோன், 9. அண்ட்ரிவ் டை, 10. முருகன் அஸ்வின், 11. முகமது ஷமி