கொரியா ஓபன்: உலக சாம்பியனான பி.வி.சிந்து முதல் சுற்றில் தோல்வி
உலக சாம்பியன் பேட்மிண்டன் தொடரில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.
புதுடில்லி: கொரியா ஓபனின் (Korea Open) முதல் சுற்றில் பி.வி.சிந்து 21-7, 22-24, 15-21 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜாங் பீவனிடம் (Zhang Beiwe) தோல்வியடைந்தார். பி.வி.சிந்து (PV Sindhu) முதல் செட்டில் வென்றார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு செட்டும் அமெரிக்க வீராங்கனை வலுவாக தாக்கியதால் இரண்டு செட்டிலும் வெற்றி பெற்றார். கடந்த நான்கு போட்டிகளில் சிந்துக்கு எதிராக ஜாங் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இன்று நடைபெற்ற கொரியா ஓபன் போட்டியின் முதல் சுற்றில் முதல் செட்டில் வென்ற பி.வி.சிந்து, இரண்டாவது செட்டில் மேட்ச் பாயிண்ட் வைத்திருந்தார். இந்த வாய்ப்பை இந்திய வீராங்கனையால் பயன்படுத்த முடியவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் ஜாங் பெய்வே வென்றார், இதன்மூலம் இரண்டு பெரும் சமநிலை (1-1) அடைந்தனர். மூன்றாவது செட்டில் அமெரிக்க வீரர் தனது சிறந்த ஆட்டத்தால் எந்த தவறும் செய்யாமல் வெற்றி பெற்றார். இந்த வெற்றி அவருக்கு முதல் சுற்றை வெல்ல வழிவகுத்தது.
முன்னதாக, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனை ஆன பி.வி.சிந்து கடந்த மாதம் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஆனால் இன்றை போட்டியில் சிந்து, முதல் சுற்றில் 21-7, 22-24, 15-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்து உலக வரிசையில் 10வது இடத்தைப் பிடித்தார். அது சுற்று கிட்டத்தட்ட 56 நிமிடங்கள் நீடித்தது.
இந்திய முன்னணி வீராங்கனை இரண்டு பேர் முதல் சுற்றிலேயே வெளியேறியதால், ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் மறுபுறம் இந்திய வீரர் பருப்பள்ளி காஷ்யப் (Parupalli Kashyap) தனது முதல் சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவின் இருப்பிடத்தை நிலைநிறுத்தி உள்ளார்.