Tokyo Olympics 2020: பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் பி.வி. சிந்து தோல்வி
ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியுற்றார்.
ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியுற்றார்.
சீன தைபே வீராங்கனை டாய் சு-யிங்கிடம் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோவியுற்றார்.
வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் அவர் சீனாவின் ஹி பிங்ஜியாவோவை பி.வி. சிந்து (PV Sindhu) எதிர்கொள்வார்.
பி.வி. சிந்துவின் தந்தை பி.வி. ரமணா, சிந்துவின் அரையிறுதி தோல்வி பற்றி கூறுகையில், “ஒரு வீரர் சரியான சமன்பாட்டிற்கு வர முடியாதபோது இப்படி நடக்கும். நேற்று, சிந்து நல்ல சமன்பாட்டுடன் ஆடினார். திடமாக விளையாடி அகனே யமகுச்சியை வென்றார். இன்று, டாய் சூ-யிங் சிந்துவுக்கு எந்த வாய்ப்பையும் அளிக்கவில்லை” என்றார்.
ALSO READ: Tokyo Olympics: வட்டு எறிதலில் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் (Tokyo Olympic Games) சனிக்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதி போட்டியில் சீன தைபேயின் டாய் சு-யிங்கிடம் பி.வி. சிந்து தோல்வியை சந்தித்தார். டாய் 21-18 மற்றும் 21-12 என்ற கணக்கில் இந்திய ஷட்லரை வென்றார்.
சிந்து போட்டியின் துவக்கத்தில் நல்ல ஃபார்மில் காணப்பட்டார். கேம் 1-ன் பெரும்பாலான கட்டங்களில் சிந்து முன்னிலையில் இருந்தார். இருப்பினும், டாய் சூ-யிங் சிந்துவுக்கு ஒரு கடுமையான போட்டியை அளித்தார்.
பின்தங்கிய நிலையில் இருந்த டாய் சு-யிங், கடுமையாக முயன்று மீண்டும் போட்டிக்குள் உறுதியாக வந்து தொடக்க ஆட்டத்தை கைப்பற்றினார்.
இருப்பினும், அதன் பிறகு டாய் சூ-யிங் அபாரமாக விளையாடி எட்டு புள்ளிகள் முன்னிலைப் பெற்றார். டாய்யின் அபாரமனா ஆட்டம் சிந்துவை வெற்றியிலிருந்து வெகு தூரத்துக்கு தள்ளியது.
அடுத்ததாக சிந்து, சீனாவின் (China) ஹீ பிங்ஜியாவோவுக்கு எதிராக மூன்றாவது இடத்துக்கான போட்டியில் விளையாடுவார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR