SA Tour: இந்திய அணியில் கேள்விக்குறியாகும் 2 பேரின் இடம்!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இஷாந்த் ஷர்மா மற்றும் ரஹானேவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, அந்த அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாக்சிங் டேவான நாளை விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் யார் இடம்பிடிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, புஜாரா, ரிஷப் பந்த் மற்றும் அஸ்வின் விளையாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ALSO READ | இந்தியாவில் 10 விக்கெட் எடுத்தா என்ன? அஜாஸ் படேலை நீக்கிய நியூசிலாந்து
ஆனால், மோசமான ஃபார்மில் இருக்கும் ரஹானேவுக்கு, பிளேயிங் 11-ல் இடம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யரை களமிறக்க அதிகம் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் கே.எல்.ராகுல் இது குறித்து பேசும்போது, இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எந்த முடிவு எடுத்தாலும் அது மிகவும் கடினமான முடிவாகவே இருக்கும் எனத் தெரிவித்தார். ரஹானே மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை எனத் தெரிவித்த அவர், இது குறித்து அணிக்குள் விவாதிக்கப்படுவதாக தெரிவித்தார். அவரின் இந்த பேச்சு தான், ரஹானேவுக்கான இடம் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது.
ஒருவேளை ரஹானே அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், இந்த தொடருக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் விளையாடும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக மாறிவிடும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதைக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு ஸ்பின்னர் மற்றும் 5 பேட்ஸ்மேன் இடம் பெறுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது. 11வது பிளேயருக்கான இடம் கூடுதல் பந்துவீச்சுக்கா? அல்லது பேட்ஸ்மேனுக்கா? என்பதை பொறுத்து ஷர்துல் தாக்கூர், ஹனுமா விஹாரி, ரஹானே, இஷாந்த் ஷர்மா ஆகியோரில் ஒருவர் இடம்பெறுவார்கள். இஷாந்த் ஷர்மாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், அவரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிப்பது சவாலான விஷயமாக மாறிவிடும்.
ALSO READ | Harbhajan: ஓய்வு முடிவை அறிவித்த ’பஞ்சாப் கிங்’
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR