Harbhajan: ஓய்வு முடிவை அறிவித்த ’பஞ்சாப் கிங்’

Harbhajan: அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 10:46 AM IST
  • 1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார் ஹர்பஜன் சிங்
  • 2007, 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை அணிகளில் இடம்பெற்றிருந்தார்
  • ஐ.பி.எல்லில் ஹர்பஜன் தலைமையிலான மும்பை அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றியது
  • ஏறத்தாழ 23 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்துக்கு விடை கொடுத்துள்ளார் ‘பாஜ்ஜி’ ஹர்பஜன்
Harbhajan: ஓய்வு முடிவை அறிவித்த ’பஞ்சாப் கிங்’  title=

இந்திய ரசிகர்களால் ’பாஜ்ஜி’ ‘த டர்பனேட்டர்’ என பட்டப்பெயருடன் செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் (Harbhajan Sing), இந்திய அணியின் நட்சத்திர பவுலராக விளங்கினார். 1998 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக களமிறங்கிய ஹர்பஜன், டெஸ்ட் போட்டிகளில் 417 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணிக்காக 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர், 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2007 ஆம் ஆண்டு வென்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு வென்ற 50 ஓவர் உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.

மேலும் படிக்க | IPL 2023: சிஎஸ்கே துருப்புச்சீட்டு இவர் தான்: ஹர்பஜன் சிங் கணிப்பு

ஐ.பி.எல் போட்டியில் சச்சினுடன் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர், கேப்டனாக இருந்து சாம்பயன் லீக் பட்டத்தையும் வென்று கொடுத்தார். அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். கடைசியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிய ஹர்பஜனை, அந்த அணி அண்மையில் ஏலத்தில் பங்கேற்பதற்காக விடுவித்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல் ஏலத்தில், தன்னை ஏலம் எடுப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருப்பதாக எண்ணிய அவர், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அந்த அறிவிப்பை ஹர்பஜன் வெளியிட்டார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்த அவர், இந்திய அணிக்காக விளையாடிய நாட்களை தன்னால் என்றும் மறக்க முடியாது எனக் கூறினார். உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தது மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். 

ALSO READ | 2006 ஆம் ஆண்டே ஓய்வு முடிவு எடுத்த ’தோனி’ - வெளியான ருசிகர தகவல்

ALSO READ | ’பஞ்சாப் கிங்’ ஹர்பஜன் விரைவில் ஓய்வை அறிவிக்கிறார்? நெக்ஸ்ட் பிளான் இதுதான்

தன்னுடைய கிரிக்கெட் பயணத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி எனக் கூறிய அவர், கிரிக்கெட் பயணத்துக்கு மகிழ்ச்சியோடு விடைகொடுக்கிறேன் எனத் தெரிவித்தார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 13 சீசன்களில் 163 போட்டிகளில் ஆடிய ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஒருமுறை 18 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது இவரது ஐபிஎல் சிறந்த பந்து வீச்சாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News