Rahul Dravid Health: இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி திருவனந்தபுரத்தில் ஜனவரி 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அனுப்பப்பட்டு உள்ளார். இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவரது இருப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகுல் டிராவிட்க்கு உடல்நலக்குறைவு


சமீபத்தில் ஜனவரி 11 ஆம் தேதி, ராகுல் டிராவிட் தனது 50 வது ஆண்டு விழாவை இந்திய கிரிக்கெட் அணி உடன் கொண்டாடினார். இந்நிலையில், தற்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அதனால்தான் அவர் வெள்ளிக்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றதாகவும் ஊடக அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய அணியுடன் ஹோட்டலில் தங்கி இருந்த ராகுல் டிராவிட்க்கு திடீரென உடல்நிலை மோசமடைந்ததாகவும், அவருக்கு பிபி லெவலும் அதிகரித்ததாகவும், அதன் பிறகு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தச் செய்தியை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க: IND vs SL: தொடரை இழந்தாலும் இலங்கையிடம் உள்ள மகத்தான சாதனை!


பயிற்சி, பயணம், ஆட்டம் -ஓய்வே இல்லை


இப்போது அவரது உடல்நிலையைப் பார்க்கும்போது, ​​மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் அணியுடன் பயணிக்க முடியாது என்று ஊகிக்கப்படுகிறது. இந்தியா, இலங்கை ஆகிய இரு அணிகளின் வீரர்களும் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் தொடர்ந்து விளையாடி வருவதால், கடுமையான நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சரியான ஓய்வு யாருக்குமே கிடைக்கவில்லை. இப்படி தொடர்ந்து பயிற்சி, பயணம், ஆட்டம் என தொடர்ந்து செயல்பட்டதால் ராகுல் டிராவிட்டுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை


ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 39.5 ஓவர்களில் 215 ஓட்டங்களுக்குச் சுருண்டது. இலக்கை டைய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி ஆரம்பத்திலேயே 86 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதையடுத்து இந்திய அணியில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 64 ரன்களில் எடுத்து இந்திய அணிக்கு சிறப்பான வெற்றியை தேடித் தந்தார். பந்துவீச்சில் இந்தப் போட்டியில் யஜுவேந்திர சாஹலுக்குப் பதிலாக சேர்க்கப்பட்ட குல்தீப் யாதவும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரமாக செயல்பட்டார். அவர் தனது 10 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து தனது அணிக்கு முக்கியமான 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது சிறப்பான செயல்பாட்டுக்கு ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.


மேலும் படிக்க: IND vs SL: இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே... கோலியின் மிரட்டல் சதம் - சச்சின் சாதனை சமன்!


விராட் கோலி சதம்


இதே தொடரின் முதல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இலங்கையின் முன் 374 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அபாரமாக ஆடி சதம் அடித்து அசத்தினார். அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 


டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி


ஒருநாள் தொடருக்கு முன்பு, இந்தியாவும் இலங்கையும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. அதில் இந்திய அணியும் 2-1 என்ற கணக்கில் வென்றது. 


சூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்


டி20 தொடரின் கடைசி மற்றும் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி ஒருதலைப்பட்சமாக இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் 3 சதங்களை அடித்துள்ளார்.


மேலும் படிக்க: சூர்யகுமார் யாதவ் ஏன் இத்தனை சாதனைகளை முறியடிக்கிறார் என்று தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ