ஆசிய கோப்பை 2023-ன் சூப்பர்-4 போட்டிகள் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் இன்று முதல் தொடங்கியுள்ளன. இந்த சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. 2023 ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். முன்னதாக, குரூப் கட்டத்தில் மழை பெய்ததால், இந்தியா-பாகிஸ்தான் போட்டி கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த போட்டிக்கு முன்னதாக இலங்கையில் இருந்து ஒரு மோசமான செய்தி வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மோசமான செய்தி!


ஆசிய கோப்பை 2023-ன் சூப்பர் 4-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 4 போட்டி செப்டம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஆனால் இந்த போட்டியிலும் மழை அச்சுறுத்தல் உள்ளது. இந்த போட்டியின் போது மழை பெய்ய 70 சதவீதம் வாய்ப்பு உள்ளது. கொழும்பில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ரசிகர்களின் பதற்றம் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | IND vs NEP: ஒற்றை கையால் கேட்ச் பிடித்து சாதனை படைத்த விராட் கோலி... என்ன தெரியுமா?


முதல் போட்டியில் மழை பெய்தது


2023 ஆசிய கோப்பையின் மூன்றாவது போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆனால் இந்த போட்டி மழை காரணமாக முடிக்க முடியாமல் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி 266 ரன்கள் எடுத்தது. இதன் பிறகு பாகிஸ்தான் அணியால் ஒரு பந்துகூட பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பிரித்து கொடுக்கப்பட்டன.


பாண்டியா-கிஷன் ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்


ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷான் ஆகியோரின் சிறப்பான அரைசதத்தால் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக 266 ரன்கள் எடுத்தது. இஷான் 81 பந்துகளில் 82 ரன்களும், பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர். இருவரும் ஐந்தாவது விக்கெட்டுக்கு 141 பந்துகளில் 138 ரன்களை சேர்த்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. பாகிஸ்தான் அணியின் அப்ரிடி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ராவுப், நசீம் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.


மேலும்படிக்க | விராட் கோலி தான் அந்த பட்டப் பேரு வச்சாரு - சிலாகிக்கும் முகமது ஷமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ