பட்லரின் வெறியாட்டம்... வெளியேறியது பெங்களூரு - ஃபைனல்ஸில் ராஜஸ்தான்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2022 ஃபைனலுக்கு சென்றது.
ஐபிஎல் 2022ன் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பதால் இரண்டு அணிகளும் வெல்லும் முனைப்போடு களமிறங்கின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, விராட் கோலியும், டூப்ளெசிஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினார்.
போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே சிக்ஸ்ர் அடித்து தனது இன்னிங்ஸை நம்பிக்கையோடு தொடங்கினார் கோலி. ஆனால் அடுத்த ஓவரிலேயே கோலி 7 ரன்களில் ஆட்டமிழக்க பெங்களூரு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அவருக்கு அடுத்ததாக கடந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய பட்டிதர் களம் புகுந்தார். பட்டிதாரும், டூப்ளெசிஸும் ஜோடி சேர்ந்து ராஜஸ்தான் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டனர்.
மேலும் படிக்க | பிரக்ஞானந்தாவுக்கு இந்தியன் ஆயில் காப்ரேஷனில் பணி நியமனம்!
இதனால் அந்த அணி பவர் ப்ளே முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ரன்களை எடுத்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி பார்ட்னர்ஷிப்பிலும் 50 ரன்களை கடந்தது.
நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ப்ளெசிஸ் 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து பட்டிதாருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். சிறிது நேரம் நிலைத்து நின்ற மேக்ஸ்வெல் போல்ட் பந்துவீச்சில் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரையடுத்து லாம்ரார் பட்டிதாருடன் ஜோடி சேர்ந்தார்.
தொடர்ந்து நன்றாக விளையாடிய பட்டிதார் இந்தப் போட்டியிலும் தனது அரை சதத்தை பதிவு செய்தார். அரைசதம் அடித்த அவர் அஷ்வின் ஒரு சிக்ஸர் அடித்து 58 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக லாம்ராரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கும், ஷாபாஸ் அகமதுவும் இணைந்தனர். தினேஷ் கார்த்திக்கும் 6 ரன்களில் வெளியேற அடுத்து வந்தவர்களும் சோபிக்க தவற பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லரும், ஜெய்ஸ்வாலும் தொடக்கம் தந்தனர். தொடக்கத்திலேயே அதிரடியை கையில் எடுத்த இந்த ஜோடி பெங்களூரு பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்டது. இதனால் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 5ஆவது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது.
இந்த சூழலில் ஜெய்ஸ்வால் 6ஆவது ஓவரில் 21 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக சஞ்சு சாம்சனும், பட்லரும் இணைந்தனர். அதிரடியாக விளையாடிய பட்லர் 22 பந்துகளில் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
இதனையடுத்து சாம்சனும், பட்லரும் தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆட ராஜஸ்தான் அணியின் வெற்றி எளிதானது. இப்படிப்பட்ட நிலையில் சாம்சன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து தேவ்தத் படிக்கல் களமிறங்கினார்.
மேலும் படிக்க | மைதானத்தில் புகுந்த ரசிகரை தூக்கிய பாகுபலி போலீஸ் - கோலியின் WWE ரியாக்ஷன்
இந்த ஜோடி தேவைப்பட்ட நேரத்தில் அதிரடியாக விளையாடியது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயரும் நிதானமாக விளையாட ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் 2022ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 106 ரன்கள் எடுத்திருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR