இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) வியாழக்கிழமை, முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் போவாரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக  நியமித்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் நிர்வாக குழு அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியீட்டின் படி, சுலக்ஷனா நாயக், மதன் லால் மற்றும் ஆர்.பி. சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) போவாவரின் நியமனத்தை ஒருமனதாக ஒப்புக் கொண்டது.


போவர் 31 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக (Team India) விளையாடியுள்ளார். மேலும் சிவப்பு பந்துகளைக் கொண்ட இரு போட்டிகளிலும் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். எனினும் அப்போது அவருக்கும் அணியின் மூத்த வீரர் மற்றும் கேப்டன் மிதாலி ராஜுக்கும் இடையிலான பிளவு காரணமாக அவர் நீண்ட நாட்கள் அந்த பதவியில் இருக்க முடியவில்லை. 


ALSO READ: ஸ்டம்புக்கு பின்னால் எம்.எஸ். தோனியை மிகவும் மிஸ் செய்கிறேன்: குல்தீப் யாதவ்


இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன், 2022 ஆம் ஆண்டுதான் தான் விளையாடும் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என மறைமுகமாக கூறியுள்ளார். முன்னர் போவார் பயிற்சியாளராக இருந்தபோது, மிதாலி, போவார் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி BCCI-க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த உலக டி 20 போட்டிகளில் தான் அவமானப்படுத்தப்பட்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


இதற்கிடையில், இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளராக போவார் இருந்த குறுகிய காலத்தில், மிதாலி தலைமையிலான இந்திய மகளிர் அணி, 2018 ஆம் ஆண்டின் ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மேலும் தொடர்ச்சியாக 14 டி 20 (T20) போட்டிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


ரமேஷ் போவார் மும்பை மூத்த வீரர்களின் அணிக்கு பயிற்சி அளித்து அந்த அணியை விஜய் ஹசாரே டிராபியை (Vijay Hazare Trophy) வெல்ல வைத்தார். மேலும், ரமேஷ் போவாருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: IPL 2021: CSK அணியின் உருக்கமான வீடியோ, சோகத்தில் ரசிகர்கள்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR