இரட்டை சதம் அடித்த இளம் வீரர் எனும் பெருமை பெற்றார் யஷஸ்வி!

மும்பை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், List A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் எனும் பெருமை பெற்றார்!

Updated: Oct 17, 2019, 10:56 AM IST
இரட்டை சதம் அடித்த இளம் வீரர் எனும் பெருமை பெற்றார் யஷஸ்வி!

மும்பை தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், List A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் எனும் பெருமை பெற்றார்!

மும்பை மற்றும் ஜார்க்கண்ட் இடையிலான விஜய் ஹசாரே கோப்பை எலைட் Group A போட்டியின் போது 17 வயது கொண்ட யஷஸ்வி 203 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதன் மூலம் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்தியர் எனும் புதிய வரலாறு எழுதினார்.

குறிப்பிட்ட இந்த இன்னிங்ஸில் 154 பந்துகள் விளையாடிய யஷஸ்வி, 17 பவுண்டரிகள் மற்றும் 12 சிக்ஸர்களுடன் 203 ரன்கள் குவித்தார். இதன்மூலம் மும்பை KSCA கிரிக்கெட் மைதானத்தில் மும்பை அணி 358/3 என்ற கடின இலக்கை நிர்ணயிக்க யஷஸ்வி உதவினார்.

நடைப்பெற்று கொண்டிருக்கும் தொடரில் இது அவரது மூன்றாவது சதமாகும். அவர் இதுவரை ஐந்து போட்டிகளில் 585 ரன்கள் குவித்துள்ளார், மேலும் விஜய் ஹசாரே டிராபியின் அதிக ரன் அடித்தவர் என்ற பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார்.  

இந்த சாதனையுடன், List A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஏழாவது இந்திய கிரிக்கெட் வீரராகவும் யஷஸ்வி திகழ்கிறார். பட்டியல் A கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் சர்மா (மூன்று முறை), ஷிகர் தவான், கே.வி. கௌமற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் என வரலாறு நமக்கு கூறுகிறது.