கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட கோவிட்-19 தொற்று காரணமாக, ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சி டிராபி போட்டிகள் தற்போது நடைபெறுகிறது.  2021-22 ரஞ்சி டிராபி போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறு உள்ளது.  ஐபிஎல் போட்டிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதால் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.  பிப்ரவரி 17 அன்று தொடங்கி மார்ச் 15 வரை முதற்கட்ட போட்டியும், இரண்டாம் கட்ட போட்டிகள் மே 30ம் தேதி தொடங்கி ஜூன் 26 வரை நடைபெற உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மோசமான ஆட்டம்: புஜாரா, ரஹானேவை ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப திட்டம்!


செதேஷ்வர் புஜாரா மற்றும் அஜிங்க்யா ரஹானே ஆகியோர் சவுராஷ்டிரா மற்றும் மும்பை அணிக்காக விளையாட உள்ளனர்.  அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் இருவரும் எதிர் எதிர் அணியில் விளையாட உள்ளனர். ஹனுமா விஹாரி (ஹைதராபாத்), நவ்தீப் சைனி மற்றும் நிதிஷ் ராணா (டெல்லி), மயங்க் அகர்வால் மற்றும் பிரசித் கிருஷ்ணா (கர்நாடகா), ஸ்ரீசாந்த் (கேரளா), ப்ரித்வி ஷா (மும்பை), ஜெய்தேவ் உனத்கட் (சௌராஷ்டிரா), க்ருனால் பாண்டியா (பரோடா), உமேஷ் யாதவ் (விதர்பா) மற்றும் விஜய் சங்கர் (தமிழ்நாடு) ஆகியோரும் ரஞ்சியில் விளையாட உள்ளனர்.



மேலும் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்றவர்கள் ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ளனர்.  யாஷ் துல் (டெல்லி), வேகப்பந்து வீச்சாளர் ரவிக்குமார் (பெங்கால்), சண்டிகர் அணியில் ஹர்னூர் சிங் மற்றும் ஆல்ரவுண்டர் ராஜ் அங்கத் பாவா உள்ளனர். விக்கெட் கீப்பர்-பேட்டர் தினேஷ் பானா மற்றும் ஆல்ரவுண்டர் நிஷாந்த் சிந்து ஆகியோர் ஹரியானா அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆஃப் ஸ்பின்னர்களான விக்கி ஓஸ்ட்வால் மற்றும் கவுஷல் தம்பே மகாராஷ்டிரா அணிக்காக விளையாட உள்ளனர். 


கடைசியாக ரஞ்சி போட்டி 2019-20 சீசனில் நடத்தப்பட்டது.  சவுராஷ்டிரா வங்காளத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்றது. பிறகு கொரோனா தொற்று நோய் காரணமாக அடுத்த சீசனில் ரஞ்சி டிராபி கைவிடப்பட்டது. 1934-35 சீசனில் தொடங்கப்பட்ட ரஞ்சி நிறுத்தப்பட்டது இதுவே முதல் முறை.  பிறகு பல்வேறு இந்திய முன்னாள் வீரர்கள் ரஞ்சி கோப்பையை நடத்த வலியுறுத்திய பிறகு தற்போது நடைபெறுகிறது.   முதல் போட்டியில் டெல்லி மற்றும் தமிழ்நாடு அணிகள் விளையாடுகின்றன.  டெல்லி அணிக்கு பிரதீப் சங்வான் கேப்டனாகவும், தமிழ்நாடு அணிக்கு விஜய் சங்கர் கேப்டனாகவும் உள்ளனர்.  டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளது.  


 



டெல்லி அணி: யாஷ் துல், துருவ் ஷோரே, ஹிம்மத் சிங், நிதிஷ் ராணா, அனுஜ் ராவத், சிமர்ஜீத் சிங், பிரதீப் சங்வான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், ஜான்டி சித்து, விகாஸ் மிஸ்ரா, க்ஷிதிஸ் சர்மா, நவ்ஸ்தீப் ஷர்மா, ஷிவம் ஷர்மா, பா. லக்‌ஷய் தரேஜா, ஷிவாங்க் வசிஷ்ட், வைபவ் கந்த்பால், ஹிருத்திக் ஷோக்கீன், பிரியான்ஷ் ஆர்யா, மயங்க் யாதவ், தேவ் லக்ரா 


தமிழ்நாடு அணி: கவுசிக் காந்தி, லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், பாபா அபராஜித், ஷாருக் கான், விஜய் சங்கர் (கேட்ச்), பாபா இந்திரஜித், ஜாக்டே மொஹம்மது , ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பி சரவண குமார், சந்தீப் வாரியர், சாய் சுதர்சன், பிரதோஷ் பால், வாஷிங்டன் சுந்தர், கங்கா ஸ்ரீதர் ராஜு, அஸ்வின் கிறிஸ்ட், லக்ஷ்மிநாராயணன் விக்னேஷ், ஆர் கவின், ஆர் சிலம்பரசன், மணிமாறன் சித்தார்த்


மேலும் படிக்க | இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடருக்கான புதிய அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR