ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் தனது சகோதரியின் மரணத்தைத் தொடர்ந்து ஐபிஎல் பயோ-பப்பில் இருந்து விலகியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த போது அவரது சகோதரி உயிரிழந்தார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டி முடிந்த பிறகு ஹர்ஷல் படேலுக்கு இந்த செய்தி தெரிய வந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சென்னையை விட்டுக்கொடுக்காத மும்பை! தொடர்ந்து 4வது போட்டியிலும் தோல்வி!


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட சோகத்தைப் பற்றி அறிந்ததும் ஹர்ஷல் அணியில் இருந்து வெளியேறினார். ஹர்ஷல் கடந்த இரண்டு சீசன்களில் RCB க்காக சிறந்த பவுலராக இருந்து வருகிறார்.  அவர் புனேவில் இருந்து மும்பைக்கு அணி பேருந்தில் திரும்பவில்லை என்று ஐபிஎல் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 12 ஆம் தேதி சிஎஸ்கேக்கு எதிரான அடுத்த ஆட்டத்திற்கு முன்பு அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



ஹர்ஷல் படேல் ஒரு கிரீன் கார்டு ஹோல்டர், அவரது குடும்பம் 2005-ல் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. விக்ரம் படேல் மற்றும் தர்ஷனா படேல் ஹர்ஷலின் பெற்றோர். கிரிக்கெட் வீரராக ஆவதற்காக ஹர்ஷல் இந்தியாவில் தங்கியிருந்தார். ஹர்ஷலிற்கு மொத்தம் மூன்று உடன்பிறந்தவர்கள், ஹர்ஷல் படேல், தபன் படேல் மற்றும் அர்ச்சிதா படேல், அர்ச்சிதா படேல் இளைய சகோதரி ஆவார்.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஹர்ஷல் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஹரியானாவைச் சேர்ந்த ஹர்ஷல் படேல் 2021 சீசனில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்து சாதனைகளையும் முறியடித்தார். ஹர்ஷலை ஆர்சிபி ஏலத்தில் 10.75 கோடிக்கு மீண்டும் எடுத்தது.



மேலும் படிக்க | மீண்டும் சொதப்பிய சிஎஸ்கே! பிளே ஆப் வாய்ப்பு பறிபோனதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR