நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. இதனால் இந்திய அணி ஹர்திக்பாண்டியா தலைமையில் களம் இறங்கியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா, 20 ஓவர் தொடரில் மட்டும் விளையாடதது ஏன்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அதற்கான தெளிவான காரணம் இப்போது வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 9 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இந்த தொடரில் விளையாட இருக்கும் சீனியர் பிளேயர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். இதனால் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவர் விளையாடவில்லை. இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரிலும் ரோகித் மற்றும் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்திய அணியுடன் தோனி... சொந்த ஊரில் சர்ப்ரைஸ் கொடுத்த 'தல'


இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசும்போது, இந்த ஆண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலக கோப்பை போட்டிகள் வர இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு சீனியர் பிளேயர்களுக்கு 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்திய அணி நிர்வாகம் இத்தகைய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். 


ரோகித் சர்மா இல்லாத இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்று வழிநடத்துக்கிறார். பிளேயராக ரோகித் சர்மா இடத்தை இஷான் கிஷனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், யாரேனும் காயம் ஏற்பட்டால் மாற்று பிளேயர்களாக விளையாடுவதற்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரித்திவி ஷா ஆகியோரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.


மேலும் படிக்க | IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ